கேள்வி :ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக உடல்நலக் குறைவால் ஒவ்வொருவராக இறந்துகொண்டே இருக்கிறார்கள். இதற்கு வாஸ்து குறைபாடு தான் காரணமா?
பதில்கள் :
வீட்டின் அமைப்பில் உள்ள தவறுகள் :
1. வடகிழக்கில் சமையலறை.
2. தெற்கு திசையை நோக்கி தென்மேற்கு வாசல் உள்ள வீட்டு அமைப்பு.
3. தென்கிழக்கில் கழிவறை, மலக்குழி அமைப்புகள்.
4. வடகிழக்கில் பூஜையறை.
5. தென்மேற்கு அறையை மாஸ்டர் பெட்ரூம் ஆக பயன்படுத்தாமல் வேறு தேவைக்காக பயன்படுத்துவது.
6. வடக்கும், கிழக்கும் முற்றிலும் மூடப்பட்ட வீடாக இருப்பது.
7. தென்கிழக்கு, தெற்கு நடுப்பகுதி இதுபோன்ற பகுதியில் கிணறு, ஆறு, ஓடை, மலக்குழி, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி போன்ற அமைப்புகள் வருவது.
ஊரின் அமைப்பு :
ஊரில் தென்கிழக்கில் தெற்குப்பகுதியில் குளம், குட்டை, ஆறு, ஓடை போன்ற நீர்நிலைகள் இருக்க வாய்ப்பு அதிகம்.
வடகிழக்கில் உயரமான மலைக்குன்றுகள் இருக்க வாய்ப்பு அதிகம்.
ஊரில் உள்ள வீடுகள் அனைத்தும் மேற்கு திசையை நோக்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஊரிலுள்ள அனைத்து வீடுகளிலுமே கழிவறை மலக்குழிக்குள், சமையலறை பூஜையறை போன்ற அமைப்புகள் ஒரே மாதிரியாக எல்லோர் வீட்டிலும் இருக்க வாய்ப்புகள் உண்டு.
இதுபோல ஒரு ஊரில் இயற்கைக்கு மாறான அமைப்புகள் இருக்கும்போது அந்த ஊரில் உள்ள தனிநபர் முதற்கொண்டு மொத்த ஊரில் உள்ள அனைவருக்குமே பாதிப்புகளை ஏற்படுத்தும்.