No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருப்பெயர்ச்சி பலன்கள் 2018-2019 - மிதுன ராசி !!

Sep 20, 2018   Ananthi   851    இன்றைய ராசிபலன் 

எந்த விதமான சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி காணும் மிதுன ராசி அன்பர்களே!!

குருபகவான் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு இடம் பெயர்கின்றார். எதிர்பாராத சிறு போராட்டங்களால் உங்கள் மீதான தன்னம்பிக்கை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் ஒரு விதமான குழப்பம் உருவாகும். எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். கடன்கள் குறைவதற்கான சூழல் உருவாகும். அந்நியர்களை நம்பி தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் போது நிதானம் வேண்டும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். நண்பர்கள் மூலம் அலைச்சலும் ஆதரவும் அதிகரிக்கும்.

பணியில் இருந்த வந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் தொழிலில் ஆதரவும், அனுகூலமான சூழலும் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகமும் சாதகமான பலன்களும் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு வெளிநாடு தொழில் வாய்ப்புகளும், இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான முயற்சிகள் ஈடேறும். தொலைந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பேச்சில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த வகையில் உறவினர்கள் மூலம் தன வரவு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அந்நியோன்யம் அதிகரிக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடன் வாய்ப்புகள் சாதகமாகும். தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய நிறுவனங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளும் ஆதரவும் கிடைக்கும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரிடும்.

உத்தியோகஸ்தரர்களுக்கு :

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களுடன் சந்தேக எண்ணங்களால் சில பிரச்சனை வந்து போகும். உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளும் எதிர்பாராத திடீர் இடமாற்றமும் உண்டாகும். பதவி உயர்வுக்காக முயற்சிப்போர் சற்று கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அலுவலக பணிகள் மூலம் மனக்கவலைகள் தோன்றும். கவனமாக பேசுவது நல்லது.

வியாபாரிகளுக்கு :

தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் அபிவிருத்தி உண்டாகும். தொழில் நிமிர்த்தமான கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வேலையாட்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.

மாணவர்களுக்கு :

மாணவ மாணவியர் சூழலுக்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும். படிப்பில் அலட்சிய எண்ணங்களால் மதிப்பெண்கள் குறையலாம். படிக்கும் போது ஒன்றுக்கு இருமுறை படிப்பது நன்மையை பயக்கும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும்.

பெண்களுக்கு :

பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. இறைநம்பிக்கை மற்றும் பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் மனக்கசப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பணிபுரியும் இடங்களில் நிதானமாக சிந்தித்து செயல்படவும் .

கலைஞர்களுக்கு :

கலைத்துறையினர்கள் பிறருடைய விமர்சனங்களால் சோர்வு அடையாமல் முயற்சியை அதிகப்படுத்தவும். புதிய வாய்ப்புகளை அலைந்து திரிந்து தான் பெற வேண்டி இருக்கும். மூத்த கலைஞர்களுடன் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் துறையினருக்கு சிலர் சொந்த உரை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். எதிர்பாலினத்தவர்களால் மனக்கசப்புகள் ஏற்படலாம். எதிலும் நிதானம் வேண்டும்.

விவசாயிகளுக்கு :

விவசாயிகளுக்கு எதிர்பார்த்த நல்ல மகசூல் மூலம் லாபம் அதிகரிக்கும். வழக்கு விவகாரத்தில் காலதாமதமான முடிவு இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். கால்நடைகளின் நலத்தில் கவனம் வேண்டும்.

பரிகாரம் :

அஷ்ட லட்சுமிகளை வணங்கி வர தன வரவு மேம்படும்.

சனிக்கிழமையில் தோறும் காகத்திற்கு அன்னமிடுதல் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதால் நற்பலன்கள் கிடைக்கும்.


Share this valuable content with your friends