No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துவில் பரிகாரம் தீர்வாகுமா?

Sep 19, 2018   Ananthi   398    வாஸ்து 

கேள்வி :

🏠 வீட்டில் கிழக்கு பகுதியில் குறைவான இடைவெளியில், வடக்கு பகுதியில் இடமே இல்லாமல், தென்மேற்கில் வாசல் உள்ளவாறு வீடு உள்ளது. இதை மாற்றி அமைக்க முடியாது என்பதற்காக பரிகாரம் செய்தபின்னும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

பதில் :

🏠 நாம் வாழக்கூடிய இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த விஷயங்களை கூறும்போது மட்டுமே மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எது கூறினாலும் அதை மக்கள் உதாசினப்படுத்தி விடுகிறார்கள்.

🏠 அதேபோல் தான், வாஸ்துவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த விஷயங்களே ஆகும். மூடநம்பிக்கைகளை நாம் எப்பொழுதும் ஊக்குவிப்பது கிடையாது.

🏠 ஒரு கட்டிடத்தை எப்படி உருவாக்கினார்களோ, அதற்கேற்ற பலனையும், தாக்கத்தையும் அந்த வீட்டில் உள்ளவர் மீது அந்த வீடு சதாசர்வகாலமும் நடத்திக் கொண்டே இருக்கும்

🏠 உதாரணத்திற்கு, உங்கள் உடலில் அறுவை சிகிச்சை செய்யும்படியான ஒரு நோய் ஏற்பட்டிருந்தால் அதற்கு எவ்வளவு காலம் நீங்கள் அறுவை சிகிச்சை தவிர்ப்பதற்கு மாத்திரை எடுத்துக்கொண்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு என்பது அறுவை சிகிச்சைதான் என்றால் அதை செய்தால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும்.

🏠 அதேபோல் தான் ஒரு வீட்டின் தவறு என்றால் அதை எடுத்து உடைத்து மாற்றி அமைத்து புதுப்பித்து கட்டிக் கொள்ள வேண்டுமே தவிர, பரிகாரம் என்கிற பெயரில் பொருட்களை வைத்துக் கொள்வதும், வர்ணங்களை மாற்றியமைப்பதும், மரங்களை வளர்ப்பதும், மீன் வளர்ப்பதும், செடிகளை வளர்ப்பதும், விலங்குகளை வளர்ப்பதும், செம்பு கம்பி பதிப்பதும், பிரமிடு பதிப்பதும், சீனா பொம்மை வைப்பதும் என இதுபோல விஷயங்கள் நிரந்தர தீர்வு ஆகாது.

🏠 ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனையுடன் வீடு கட்டும் பொழுது சரியாக அமைத்துக் கொண்டால் ஒரு செலவுடன் முடிந்துவிடும். தவறாக கட்டிவிட்டு அதை இடித்து உடைத்து புதுப்பிக்கும் பொழுது மூன்று வித செலவுகள் செய்ய வேண்டி வரும்.


Share this valuable content with your friends


Tags

கின்னஸ் புத்தகம் தான் எண்ணியதை நிறைவேற்றும் செயல்திறன் உடையவர்கள். ரிஷப ராசிக்கும் திருமண பொருத்தங்கள் உண்டா? வரலட்சுமி விரத பூஜைக்கு வேண்டிய பொருட்கள் திசை சந்திப்பு இருந்தால் திருமணம் செய்யலாமா? ஜுன் 14 இறந்த என் பாட்டி கனவில் வந்தால் என்ன பலன்? கடினமான வழிகளில் மிதிவண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேய்பிறை marriage factors ஒருவருக்கு அணிவித்த மாலையை மற்றொருவருக்கு அணிவிக்கலாமா? 03.07.2021 Rasipalan in PDF Format!! vaikunda egathaisi காலபைரவர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? 11ல் குரு இருந்தால் என்ன பலன்? மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? முன்னோர் வழிபாடு நவம்பர் 30 விருச்சக ராசி 3 ல் சனி மற்றும் குரு இணைந்திருத்தால் என்ன பலன்?