No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் !!

Sep 18, 2018   Ananthi   559    ஆன்மிகம் 

🌟 புரட்டாசி மாதத்தில் பிறந்த குழந்தைகள் அறிவுடனும், திறமையுடனும் ஞானம் மிக்கவராக இருப்பார்கள்.

🌟 புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்கள். சிறுவயதிலேயே நூல்களைப் புரட்டிப் படிப்பார்கள்.

🌟 புரட்டாசியில் பிறந்த இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள்.

🌟 இவர்கள் அரிய வகை நூல்களைச் சேகரிப்பார்கள். விரைவில் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு.

🌟 இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காத மேதைகளாகவும், படித்த பட்டதாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குவார்கள்.

🌟 தன் உழைப்பினாலும், திறமையினாலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள்.

🌟 இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார்கள். காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பார்கள்.

🌟 இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும்.

🌟 இவர்கள் மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சாமர்த்தியசாலிகள்.

🌟 ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள். எதையும் திறம்படச் செய்யவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள்.

🌟 மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தெரியும், அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக்கூறி விடுவார்கள்.

🌟 பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்குவழிகளைக் கடைப்பிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

🌟 சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள்.

🌟 நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வதைத் திருந்தச் செய்வார்கள்.


Share this valuable content with your friends