No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ரிஷப ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 17, 2018   Ananthi   489    நவ கிரகங்கள் 

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிரனுக்கு, சனிபகவான் நட்பு என்னும் உறவில் நின்று அவரால் செய்ய இயலும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள்.

🌟 எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இன வேறுபாடின்றி அனைவரிடமும் அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.

🌟 தகுதி அறிந்து உதவக்கூடியவர்கள். தன்னுடைய செயல்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 தனது வருத்தங்களை வெளிக்காட்டாமல் என்றும் மகிழ்ச்சியாக இருப்பது போல் காட்டிக்கொள்பவர்கள்.

🌟 அறுசுவை உணவை ரசித்து, சுவைத்து உண்ணக்கூடியவர்கள். சுவை பிடித்துவிட்டால் கூச்சமின்றி மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடக்கூடியவர்கள்.

🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.

🌟 தந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

🌟 தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கப் பெற்றவர்கள்.

🌟 சமூகத்தில் மதிப்பும், மரியாதையுடனும் வாழக்கூடியவர்கள்.

🌟 தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 தெய்வ காரியங்கள் மற்றும் திருப்பணிகளை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

🌟 தனக்கு உதவியவர்களை என்றும் மறக்காமல் பிரதி உபகாரம் செய்யக்கூடியவர்கள்.

🌟 தொழில் திறமையும், பொருள் ஈட்டும் வல்லமையும் உடையவர்கள்.

🌟 அரசியல் ஆதரவு உடையவர்கள்.

🌟 பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் திறமை உடையவர்கள்.


Share this valuable content with your friends