No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராசியில் சனி பகவான் !!

Sep 17, 2018   Ananthi   498    நவ கிரகங்கள் 

நாம் செய்த வினையின் பலனை எவ்விதமான வேறுபாடின்றி அளிக்கும் நீதிமான் சனிபகவான் ஆவார். நிதானமான செயல்பாடுகளையும், சிந்தித்து செயல்படும் திறமையும் அளிக்கக்கூடியவர். இன வேறுபாடின்றி அனைவருக்கும் சமமான நீதியை அளிக்கக்கூடியவர். இனி இவர் பனிரெண்டு ராசிகளில் நின்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

கிரகத்தை பற்றிய சில குறிப்புகள் :

🌟 தந்தை : சூரிய தேவர்

🌟 தாய் : சாயா தேவி

🌟 உகந்த நாள் : சனிக்கிழமை

🌟 சனி பிரதி அதிபதி : எமதர்மராஜன்

🌟 சனி மனைவி : நீலாதேவி

🌟 வசிக்கும் இடம் : அசுத்தமான இடங்கள் (கழிவு நீர் பாதை, கழிவுகள் நிறைந்த இடம்)

🌟 வலிமை உடைய பொழுது : இரவில் வலிமை உடையவர்

🌟 ராசியை கடக்கும் காலம் : 2 1 / 2 ஆண்டுகள்

🌟 சனி நட்பு கிரகங்கள் : புதன், சுக்கிரன், இராகு, கேது

🌟 சனி பகை கிரகங்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்

🌟 சனி சமமான கிரகம் : குரு

🌟 சனி தசா காலங்கள் : 19 வருடங்கள்

🌟 சனி நட்சத்திரம் : பூசம், அனுஷம், உத்திரட்டாதி

சனியின் குணங்கள் :

நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே மிகவும் குறைந்த வேகத்திலும், நிதானமான செயல்பாடுகளை உடையவர். ஆனால், இவர் அளிக்கும் பலனானது நீண்ட நாட்களுக்கு நீடித்து இருக்கும். வாழ்க்கையின் மறுபக்கம் என்பதனை பற்றி தெளிவாக நமக்கு விளங்க வைக்கும் வல்லமை உடையவர். சனிபகவானின் பார்வை நாம் செய்த கர்ம பலன்களை அளிக்கக்கூடியது.


🌟 இனி வரும் நாட்களில் சனி ஒவ்வொரு ராசியில் இருந்தால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை நாம் காண்போம்.


Share this valuable content with your friends