No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துலாம் ராசிக்கு தெற்கு வாசல் வைத்துள்ளதால் பிரச்சனைகள் அதிகரிக்கிறதா? அதற்கு இதுதான் காரணமா?

Sep 17, 2018   Ananthi   669    வாஸ்து 

துலாம் ராசிக்கு தெற்கு வாசல் வைத்துள்ளதால் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறதா? இதற்கு என்ன காரணம்?

ஒருவருடைய ஜாதகரீதியாக லக்னத்திற்கு நான்காம் இடத்தின் தொடர்பை பொருத்து ஒருவர் வாடகை வீட்டில் இருப்பாரா? கூரை வீட்டில் இருப்பாரா? ஓட்டு வீட்டில் இருப்பாரா? மாடி வீட்டில் இருப்பாரா? அல்லது இரண்டு மாடி வீட்டில் இருப்பாரா? என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால். ஒருவர் இந்த திசையில் தான் இருக்க வேண்டும் அல்லது இந்த திசையில் தான் வீடு கட்ட வேண்டும் என்று கூறுவது தவறு.


வீட்டின் தவறுகள் :

1. தெற்கு வாசல் உச்சத்தில் இல்லாமல், நீச்சத்தில் அதாவது தென்மேற்கு சார்ந்து வந்துவிட்டாலே உங்களுடைய கணவர் ஏசுளு வாங்கிவிடுவார். அதனால் முக்கிய வாசலே தவறு.

2. தெற்கு பகுதியில் இடம் வேண்டும் என்பதற்காக அதிக காலியிடம் விட்டுவிட்டு, வடக்கு பகுதியில் மிக குறைந்த இடைவெளியில் வீடு அமைத்துக்கொள்வது அல்லது வடக்கு முழுவதும் மூடிய அமைப்பில் கூட வீடு அமைந்திருக்கலாம். இந்த அமைப்பு வருமானத்தை கொடுக்காது மாறாக கடனை உருவாக்கும்.

3. தெற்கு வாசல் வரும்போது சமையலறையை தென்கிழக்கிற்கு பதிலாக வடமேற்கில், வடகிழக்கில், தென்மேற்கில் என ஏதாவது வேறு ஒரு பகுதிக்கு தவறான இடத்தில் மாற்றி அமைத்துக்கொள்வது.

4. கிழக்கு முழுவதும் மூடிய அமைப்பில் வீடு அமைந்திருப்பது.

5. தெற்கு பகுதியில் போர்டிக்கோ அமைப்பை, கூரை மட்டத்திலிருந்து கீழே இறக்கி தாழ்வாக அமைத்துக் கொள்வது.

6. கார் பார்கிங் அமைப்பிற்காக தெற்கு பகுதியின் தரையை வீட்டை விட கீழே தாழ்வாக அமைத்திருப்பது.

7. கார் வீட்டிற்குள் நுழைவதற்கு முக்கிய கேட்-டை தென்மேற்கு, தெற்கு பகுதியில் அதாவது நீச்சத்தில் வரும்படி அமைத்திருப்பது.

8. போர், கிணறு, தரைக்குகீழ் தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி போன்றவைகளை வீட்டின் தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு பகுதியில் அமைத்திருப்பது.

9. மாடிபடி அமைப்பை தென்மேற்கில் மூடிய அமைப்பில் உருவாக்கி இருப்பது.

10. பூஜையறை வீட்டின் மொத்த அமைப்பில் வடகிழக்கில் அமைத்திருப்பது.


Share this valuable content with your friends