No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேனை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Sep 17, 2018   Ananthi   5877    கனவு பலன்கள் 

1. தேனை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தேனை எடுப்பது போல் கனவு கண்டால் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.

2. இரு சக்கர வாகன விபத்தில் என் கணவரும், குழந்தையும் சாலையில் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

3. என்னை கோவில் தர்மகர்த்தாவாக தேர்ந்தெடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 பதவி உயர்வு கிடைப்பது போல் கனவு கண்டால் செய்கின்ற பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.

4. பழைய உடைந்த பானையை எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பழைய உடைந்த பானையை எடுத்து வருவது போல் கனவு கண்டால் செய்கின்ற பணிகளில் இன்னல்கள் உண்டாகும்.

🌟 எனவே, நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும்.

5. திருமாங்கல்யத்துடன் இருந்த குண்டு லட்சுமிகாசை அழித்து விட்டு மோதிரமாக செய்து, பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?

🌟 திருமாங்கல்யத்துடன் இருந்த குண்டு லட்சுமிகாசை அழித்து விட்டு மோதிரமாக செய்து பிறருக்கு பரிசாக கொடுக்கக்கூடாது.



Share this valuable content with your friends