No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாலகிரக தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Sep 12, 2018   Ananthi   4038    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு ராசிக்கு எந்த திசையில் வீடு அமைய வேண்டும்?

🌟 தனுசு ராசிக்கு கிழக்கு திசையில் வீடு அமைய வேண்டும்.

2. எனக்கு துலாம் ராசி, விசாக நட்சத்திரம், துலாம் லக்னம். நான் எந்த ராசி பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்?

🌟 துலாம் லக்னக்காரர்கள் மீனம் மற்றும் ரிஷப ராசி உள்ள பெண்களை தவிர மற்ற ராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

3. எனது மகன் ஆன்மீக சிந்தனைகள் பற்றி பேசினால் கோபப்படுகிறான். அவனை எப்படி ஆன்மீகத்தில் இணைப்பது?

🌟 பெரியவர்கள், சிறு வயது முதலே அனைத்து குழந்தைகளுக்கும் கோவில் மற்றும் ஆன்மீகச் செய்திகளை பற்றி கூறி வளர்க்காமல் இடையில் நம் விருப்பப்படி ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களை அவர்களிடம் திணிப்பது அவர்களுக்கு பிடிக்காத விஷயமாகும்.

🌟 ஆகவே, விருப்பமில்லாமல் எவரையும் கட்டாயப்படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவது என்பது சரியானதாக இருக்காது.

🌟 வாழ்க்கை பயணமும், சில அனுபவமும் அவர்களை ஆன்மீகத்தில் ஈடுபட செய்யும்.

🌟 ஆன்மீகம் என்பது மற்ற விஷயங்களை போல் கட்டாயப்படுத்தக்கூடியவை அல்ல.

🌟 அவரவர் எண்ணங்களும், செயல்களுமே அவருக்கு கிடைக்க இருக்கும் ஆன்மீகம் தொடர்பான அருள்களையும், ஆசிகளையும் நிர்ணயம் செய்கின்றன.

🌟 காலமே அனைத்திற்கும் பதில் அளிக்கும். கவலைக்கொள்ள வேண்டாம்.

4. புத்திர பாக்கியம் கிடைக்க என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

🌟 புத்திர பாக்கியம் கிடைக்க தட்சிணாமூர்த்திக்கு பௌர்ணமி அன்று விரதம் மேற்கொண்டு மஞ்சள் வஸ்திரத்தை தானம் செய்ய வேண்டும்.

🌟 தம்பதிகள் ஸ்ரீ ராமருக்கு செம்பருத்தி பூக்களை அர்ப்பணம் செய்து அந்த பூக்களை உண்டு வர புத்திர பாக்கியம் கிடைக்கும்.

5. ராகு திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 தம்பதிகளுக்கிடையே பிரச்சனைகள் உண்டாகும்.

🌟 பகைவர்களால் மனவருத்தங்கள் ஏற்படும்.

🌟 எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை உண்டாகும்.

6. பாலகிரக தோஷம் என்றால் என்ன? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 குழந்தை பிறந்தது முதல் 12 வயது வரை துர்தேவதைகளின் தாக்குதல்களால் உடல் அளவிலும், மனதளவிலும் சில இன்னல்கள் ஏற்படும். இதுவே, பாலகிரக தோஷம் ஆகும்.

🌟 ஜாதகத்தில் கிரக நிலைகளின் தன்மைக்கேற்ப வயது வரம்புகளில் மாற்றம் ஏற்படும்.

🌟 பாலரிஷ்ட தாயத்து மற்றும் கரி நாள் இல்லாத செவ்வாய், சனிக்கிழமைகளில் பைரவர் மற்றும் வராஹி அம்மனை வழிபட்டு அவர்களின் பிரசாதங்களை குழந்தைக்கு அளித்து வர நலம் உண்டாகும்.


Share this valuable content with your friends