No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. என்னுடைய காதலனுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

Sep 06, 2018   Ananthi   582    ஜோதிடர் பதில்கள் 

1. தனுசு ராசி, மீன லக்னம் இவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌷 கற்பனைத் திறன் உடையவர்கள்.

🌷 திறமைகள் பல நிரம்பியவர்கள்.

🌷 ரகசியத்தை பாதுகாக்க தெரியாதவர்கள்.

🌷 மாற்றத்தை விரும்பக்கூடியவர்கள்.

2. ஆந்தை வீட்டிற்குள் புகுந்து பிறகு சென்றுவிட்டது. அதன்பிறகு குடும்ப சூழ்நிலை படுமோசமாக உள்ளது. இதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா?

🌷 வீட்டை கடல் நீரையோ அல்லது கல் உப்பு கலந்த நீரையோ கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.

🌷 குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுதல் நன்மையை தரும்.

🌷 வீட்டில் காலை, மாலை என இரு நேரங்களிலும் தீபம் ஏற்றுதல் நன்மையை தரும்.

3. நான் சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். எனக்கு தொழில் எதுவுமே சிறப்பாக அமையவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌷 தொழிலை ராசியை கொண்டு அமைப்பதைக் காட்டிலும் லக்னத்தை கொண்டு அமைப்பது சரியானதாகும்.

4. நான் கடக லக்னம், மேஷ ராசி. 6ல் ராகு உள்ளது. மேலும், ராகு திசை நடந்தால் என்ன பலன்?

🌷 எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

🌷 உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.

🌷 பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வழக்கு விவகாரங்கள் சாதகமான பலனைத் தரும்.

5. எனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. என்னுடைய காதலனுக்கு செவ்வாய் தோஷம் இல்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌷 செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் தோஷம் உள்ளவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

🌷 காதலிப்பவருடன் எல்லா நிலையிலும் அனுசரித்து செல்ல முடியும் என்றால் திருமணம் செய்து கொண்டு மேற்கொண்டு எந்த சூழ்நிலையிலும் ஜாதகம் பார்க்காமல் இருக்க வேண்டும்.


Share this valuable content with your friends