No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துபடி பக்கத்து வீட்டு அமைப்புகள் நம்மை பாதிக்குமா?

Jun 22, 2018   Dharani   407    வாஸ்து 

👑 நாம் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள (பக்கத்து வீட்டில்) அமைக்கக்கூடிய செப்டிக்டேங், மற்றும் தண்ணீர் தொட்டி அமைப்பு, போர் அமைப்பு இவைகளால் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1. நாம் குடியிருக்கும் வீட்டிற்கு நான்கு புறமும் உள்ள வீடுகளில் இதுபோல் செப்டிக்டேங், வாட்டர் டேங், போர், சம்பு போன்ற அமைப்புகள் அமைக்கும்போது நமது வீட்டிற்கு பாதிப்பு என்பது உறுதி. நமது வீட்டிற்கு தெற்கு பகுதியில் உள்ள வீட்டில் வட கிழக்கில் அமைக்கும் வாட்டர் டேங் நமக்கு தென்கிழக்கில் வரும். அதே வீட்டிற்கு அவர்கள் வடமேற்கு பகுதியில் அமைக்கும் செப்டிக்டேங் நமக்கு தென்மேற்கு பகுதியில் வரும். இது மிகப்பெரிய தவறு. இதுபோல் அமைப்புள்ள வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் என்பது மிக அரிது.

2. நமது வீட்டிற்கு மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் அமைக்கக்கூடிய வாட்டர் டேங், நமது வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் தான் வரும். அதனால் நமக்கு கெடுதலான பலன்களே கிடைக்கும். இதன் பலன் வருமானம் என்பதும் கேள்விக்குறியே. கடன் சுமையும் கட்டுக்கடங்காமல் போய்விடும். நாணயம் கெட்டுவிடும்.

3. நமது வீட்டிற்கு கிழக்கு பகுதியில் வரக்கூடிய வீட்டின் சுவர் வடமேற்கு பகுதியில் அமைக்கும் செப்டிக்டேங் நமது வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில்தான். அது மட்டுமல்லாது அவர்கள் வடமேற்கு பகுதியில் பாத்ரூம், படிஅமைப்பு போன்றவைகள் அமைத்திருந்தாலும் அதுவும் நமக்கு வடகிழக்கில் வந்து மிக மோசமான செயல்களையே உண்டு பண்ணும்.

👑 குடும்பத்தில் உறவுகளில் விரிசல், சுயசிந்தனை இல்லாமை விபத்து ஏற்படுதல், தான் யார் என்பதையே மறந்த நிலைமை. இதுபோல இன்னும் சில பாதிப்பு வர வாய்ப்புண்டு. இதுபோல் பாதிப்புகள் வராமல் இருக்க என்ன செய்வது என்றால், நீங்கள் குடியிருக்கும் உங்களது வீட்டிற்கு நான்கு புறமும், காம்பவுண்ட் சுவர் மிகமிக முக்கியமாக வேண்டும். அதுவும் காம்பவுண்ட் உங்களுடைய தனிப்பட்ட சுவராக இருக்க வேண்டும்.

👑 காம்பவுண்ட் சுவர் இல்லாத வீடுகளில் தான் இதுபோல் பிரச்சனைக்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் காம்பவுண்ட் என்பது மிகமிக அவசியமான ஒன்று. இனி கட்டக்கூடிய வீடுகளில் முதலில் காம்பவுண்ட் போட்டுவிட்டு வீட்டை கட்டுங்கள். வீடு விரைவில் முற்றுபெறும். இது வரைக்கும் காம்பவுண்ட் போடாத வீடுகளுக்கு கூட நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு காம்பவுண்ட் அமைத்து கொள்வது சிறப்பு. காம்பவுண்ட் சுவர் என்பது உங்க வீட்டிற்கு பாதுகாப்பு வேலி, மற்றொன்று அது தந்தை சுவர் என்றும் கூறுவோம்.

Tagged  Vasthu

Share this valuable content with your friends


Tags

Friday Horoscope in pdf format - 17.08.2018 அஷ்டமி நாட்களில் ஜோதிடம் பார்க்கலாமா? Pātaccaṉi parikāraṅkaḷ.! கிழக்கு பார்த்த வீட்டிற்கு செப்டிக் டேங்க் எந்த திசையில் வர வேண்டும்? வீட்டிற்குள் நல்ல பாம்பு வந்தால் நன்மையா? தீமையா? தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? வீட்டை நமது வசதிக்காக மாற்றி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!! அன்னம் பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுன ராசி பலன்கள்.! அமாவாசை அன்று பெண் பார்க்க செல்லலாமா? குல்சாரிலால் நந்தா சடலங்கள் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வருமானம் இல்லாமல் போவதற்கு வாஸ்துதான் காரணமா? மிதுன ராசி JATHAKAM FALSE 12.06.2019 Rasipalan in pdf format!! shimma rāsi palaṉgaḷ.! navamasam hero today horosocpe