No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பணவரவு தடைபட கட்டிட அமைப்புகள்தான் காரணமா?

Sep 04, 2018   Ananthi   458    வாஸ்து 

மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவைகளில் பணம் பிரதானமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50மூ மேல் செலவிடுகிறான். ஒரு சிலருக்கு நல்ல உத்தியோகம் அமைந்து கஷ்டம் எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க பணம் கிடைத்து கொண்டே இருக்கிறது. இன்னும் சிலருக்கு கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே பணம் என்பது கிடைக்கிறது. இன்னும் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் என்பது பற்றாக்குறையாகவே திகழ்கிறது. இவைகளுக்கு எல்லாம் காரணங்கள் தான் என்ன?

வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கும்போது பணவரவில் எல்லோருக்குமே மாற்றம் ஏற்படுகிறது.

பணவரவு இல்லாமலும், பணவரவு பற்றாக்குறைக்கான காரணமான வீட்டின் அமைப்புகள் :

1. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பு

2. வடக்கு பகுதியில் ஜன்னல் இருந்தும் திறந்து வைக்காத அமைப்புகள்.

3. வடக்கு பகுதியில் குறைவான இடைவெளியில் காம்பவுண்ட் அமைப்பு.

4. வடக்கு பகுதி மூடிய அமைப்பில் போர்டிக்கோ போட்டுக் கொள்வது

5. வடக்கு பகுதியில் நமது வீட்டின் மிக அருகிலேயே பக்கத்து வீட்டின் மிக உயரமான கட்டிட அமைப்புகள் வருவது.

6. வடக்கு பகுதி முழுவதும் உயரமான மரங்கள் வருவது.

7. வடகிழக்கில் பூஜையறை வருவது

8. வடகிழக்கில் கழிவறை வருவது

9. வடகிழக்கில் மாடிபடி அமைப்பு வருவது.

10. வடகிழக்கில் சிட்அவுட் வருவது.

11. வடக்கு சுவர் பொது சுவராக வருவது

12. வடக்கு வாசல் என்பது வடமேற்கு பகுதியில் நீச்ச வாசலாக வருவது

13. புதன் வாசல் என்கிற பெயரில் வடக்கு வாசலை வைத்து விட்டு நேர்ரெதிர் தெற்கு பக்க வாசலை நீச்ச வாசலாக வைப்பது.

14. மொத்த வீட்டை வடக்கு முகமாக அமைத்துவிட்டு, வடகிழக்கில் ஒரு சிறிய சிட்அவுட்டை உருவாக்கி அதில் கிழக்கு வாசலாக வைத்துக் கொள்வது.

15. வடக்கு முழுவதும் மூடிய அமைப்பில் கார் செட் போட்டுக்கொள்வது

16. குழி கணக்கு, ஆயாதி என்கிற பெயரில் மொத்த கட்டிடத்தையும் ட ப வடிவத்தில் உருவாக்கி கொள்வது.


பணவரவில் தடையுள்ள வீடுகளும், பணவரவே இல்லாத வீடுகளில் நான் குறிப்பிட்ட இந்த அமைப்புகள் கண்டிப்பாக இருக்கக்கூடும்.


Share this valuable content with your friends


Tags

வார ராசிபலன்கள் (27.12.2021 - 02.01.2022) PDF வடிவில்...!! கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பது போல் கனவு கண்டால் என்ன? Yōga caṉi.! அ.மாதவையா 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? குபேரன் தாட்சாயிணி தேவி friday சாமி படங்களை இரும்பு ஸ்டாண்டில் வைக்கலாமா? ஜூலை 24 அடிக்கடி பல் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ரிஷப லக்னத்தில் கேது இருந்தால் தீமையா? திதி சூன்யம் என்றால் என்ன? முதுகில் பெரிய பாம்பு கடித்துக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஒரு வீட்டில் மூன்று பேருக்கு ஒரே லக்னம் இருக்கலாமா? லக்னத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? dhinsari horoscope 01.05.2020 in pdf format இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்? வார ராசிபலன்கள் (21.10.2019 - 27.10.2019) PDF வடிவில் !! 27.01.2021 Rasipalan in PDF Format!!