No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Sep 01, 2018   Ananthi   722    நவ கிரகங்கள் 

மீன ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தனது வீடான மீன ராசியில் குரு ஆட்சி பெற்று செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 நல்ல கம்பீரமான தோற்றத்தையும், அழகிய தோற்ற பொலிவினையும் உடையவர்கள்.

🌟 பேசுவதை காட்டிலும் செயல்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

🌟 வழிபாடுகளும், விரதங்களும் நேரம் தவறாமல் செய்யக்கூடியவர்கள்.

🌟 இனப்பற்று இருப்பினும் அனைவரையும் ஒரே மாதிரியாக வழிநடத்தவும், அவர்களுக்கு உகந்த மரியாதையும் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 திருத்தலம் சம்பந்தமான பணிகளை செய்வதில் விருப்பமும், நாட்டமும் உடையவர்கள்.

🌟 சுயநலமின்றி பொது நலத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 புத்திக்கூர்மையுடனும், எதிலும் எச்சரிக்கை உணர்வோடும் செயல்படக்கூடியவர்கள்.

🌟 தொழில் வளமும் அதைச் சார்ந்த அறிவும் உடையவர்கள்.

🌟 கிடைத்த அதிகாரத்தை என்றும் தவறாக உபயோகப்படுத்தமாட்டார்கள்.

🌟 எதையும் நேர்மையான பாதைகளில் மட்டும் சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 குடும்பத்தை சிறந்த முறையில் வழிநடத்தி செல்லக்கூடியவர்கள்.

🌟 கூட்டுக்குடும்பமாக இருக்க விரும்புபவர்கள்.

🌟 பயனற்ற செலவுகளை முற்றிலும் தவிர்க்கக்கூடியவர்கள்.

🌟 ரசனையான பேச்சுகளையும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்புபவர்கள்.


Share this valuable content with your friends