No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலுக்கு சென்றவுடன் செய்ய வேண்டியவைகள் என்ன? செய்யக்கூடாதவைகள் என்ன?

Aug 31, 2018   Ananthi   585    ஜோதிடர் பதில்கள் 

1. சிம்ம லக்னக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சூது, வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.

🌟 நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.

🌟 பல தோல்விகள் அடைந்தாலும் போராடி வெற்றியடையக்கூடியவர்கள்.

🌟 யாருக்கும் அடிப்பணியாத குணம் உடையவர்கள்.

2. ரேவதி நட்சத்திரத்தின் ராசி எது?

🌟 ரேவதி நட்சத்திரத்தின் ராசி மீனம் ஆகும்.

3. ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும்?

🌟 ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அரசனுக்கு களங்கமோ அல்லது ஆபத்தோ ஏற்படும்.

4. எங்கள் வீட்டு பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 உங்கள் வீட்டு பெண் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய வேண்டாம்.

5. கோவிலுக்கு சென்றவுடன் செய்ய வேண்டியவைகள் என்ன? செய்யக்கூடாதவைகள் என்ன?

செய்ய வேண்டியவை :

🌟 கோவிலில் அமைதி காக்க வேண்டும்.

🌟 கோவிலில் சுத்தத்தை பேணி காத்தல் வேண்டும்.

🌟 கோவிலில் குடும்ப விவகாரங்களை விடுத்து ஆன்மீக எண்ணங்களுடனும், இறை எண்ணங்களுடனும் இருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை :

🌟 கோவிலிற்கு குளிக்காமல் செல்லக்கூடாது.

🌟 விபூதி, குங்குமத்தை கோவிலில் உள்ள தூண்களில் வைப்பது தவறானது.

🌟 சுவாமிகளை தொட்டு திருவடிகளில் தீபம் ஏற்றக்கூடாது.

🌟 லுங்கிகள் அணிந்து கோவிலிற்கு செல்லக்கூடாது.

6. உடல் உஷ்ணம் அதிகமாக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 செம்பு பாத்திரத்தில் வைத்த நீரை அதிகம் பருக வேண்டும்.

🌟 தினமும் மோர் மற்றும் தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

🌟 தலையில் அடிக்கடி தேங்காய் எண்ணெயை தேய்த்துக் கொள்ளவும்.

🌟 வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும்.


Share this valuable content with your friends