No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 28, 2018   Ananthi   1511    கனவு பலன்கள் 

1. முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சியால் மேன்மையான சூழலும், புதிய வாய்ப்புகளும் உண்டாகும்.

2. வீடு கட்டும் இடத்தில் கோவில் இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு கட்டும் இடத்தில் கோவில் இருப்பதாக கனவு கண்டால் இல்லற வாழ்க்கையில் இருக்கும் பல குழப்பங்களுக்கு கூடிய விரையில் சுபமான முடிவுகள் உண்டாகும். இருப்பினும் நீங்கள் நிதானத்துடன் செயல்படவும்.

3. எனக்கு முஸ்லீம் நண்பர் ஒருவர் கவலைப்படாதே நான் வேலை வாங்கி தருகிறேன் என்று என் கனவில் கூறினார். அதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதால் நெருக்கடியான சூழலை தவிர்க்க முடியும்.

4. ஒருவர் வீட்டில் நான் திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒருவர் வீட்டில் நீங்கள் திருடுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத வகையில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

5. காகத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காகத்தை கனவில் கண்டால் நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.

6. என் அக்காவின் தாலி சங்கிலியை திருடன் அறுத்துக்கொண்டு போவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்கள் அக்காவின் தாலி சங்கிலியை திருடன் அறுத்துக்கொண்டு போவதாக கனவு காண்பது உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

7. கனவில் யாரோ ஒருவர் என்னுடைய அப்பாவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளதாக கூறினால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தந்தையின் மூலம் பொருள் வரவு உண்டாகும்.


Share this valuable content with your friends