No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கருடனை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 28, 2018   Ananthi   623    ஆன்மிகம் 

🌟 வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அதுமட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.

🌟 மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளியிருப்பது மிகவும் சிறப்பானதாகும். கருடன் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.


🌟 நோய்களால் பாதிக்கப்பட்டோர் இவரை விரதமிருந்து வழிபடுவதால் பிணி, பீடைகள் நிவர்த்தியாகும்.

🌟 பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி தோஷம் மற்றும் செய்வினைக் குற்றம் ஆகியன இவரை வழிபடுவதால் நிவர்த்தி ஆகும்.

🌟 ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும் கண்டாதி தோஷங்கள், விபத்து மற்றும் ஆயுள் பயம் ஆகியன நிவர்த்தி ஆகும்.

🌟 திருமணத்தடை, புத்திரதோஷம் போன்ற தடைகள் விலக இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

🌟 எதிரிகளை ஜெயிக்க, வழக்குகளில் வெற்றி பெற இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

🌟 படிப்பில் தேர்ச்சி பெற, வேலைவாய்ப்புக் கிடைக்க இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

🌟 குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌபாக்கியம் உண்டாக இவரை விரதமிருந்து வழிபடுங்கள்.

🌟 அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில், வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றி மற்றும் லாபம் பெற இவரை வணங்குங்கள்.

🌟 நிலம், வீடு, மனை போன்றவற்றில் லாபம் உண்டாக இவரை வணங்குங்கள்.

🌟 விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைப்பதற்கும் இவரை வணங்குங்கள்.

🌟 கிடைக்க வேண்டிய சொத்துக்கள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல் போன்றவை கருடனை வணங்குவதால் கிடைக்கும்.

🌟 மேலும், நியாயமான எண்ணங்கள், ஆசைகள் நிறைவேற கருட பகவானை விரதமிருந்து வழிபடுங்கள்.


Share this valuable content with your friends