No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மந்திரம் சித்தியாக என்ன செய்ய வேண்டும்?

Aug 24, 2020   Ananthi   316    ஜோதிடர் பதில்கள் 

1. பாவக ரீதியான பொருத்தங்கள் என்றால் என்ன?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் என்பது மணமக்களின் லக்னாதிபதி, ராசி அதிபதி மற்றும் மணமகனின் ஜீவன ஸ்தானம், சுக்கிரன், செவ்வாய் பொருத்தங்கள் மற்றும் சில பொருத்தங்களை கொண்டதாகும்.

2. ௭மகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாமா?

🌟 ௭மகண்ட நேரத்தில் குழந்தை பிறக்கலாம்.

3. 3ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 தர்ம சிந்தனை மிக்கவர்கள்.

🌟 துணிச்சலாக இருப்பார்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 9ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் குறைவாக இருக்கும்.

🌟 தந்தைக்கும், ஜாதகருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 5ல் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 அடிப்பணிந்து நடக்கக்கூடியவர்கள்.

🌟 பொதுநலமின்றி சுயநல எண்ணங்கள் மேம்பட்டு காணப்படும்.

🌟 இவர்களுக்கு இளைய சகோதரர்களால் அனுகூலமற்ற செயல்கள் நடைபெறும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. மந்திரம் சித்தியாக என்ன செய்ய வேண்டும்?

🌟 தியான நிலையில் மனதை ஒருநிலைப்படுத்தி மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும். எதுவும் உடனே நடைபெறாது, சிறிது காலதாமதம் ஆகும்.

7. திருமணத்திற்கு ராசி பொருத்தம் முக்கியமானதா?

🌟 திருமணத்திற்கு ராசி பொருத்தத்தை விட பாவக ரீதியான பொருத்தங்கள் முக்கியமானதாகும்.



Share this valuable content with your friends