No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்கள் நவகிரக மோதிரம் அணியலாமா?

Aug 27, 2018   Ananthi   398    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கும்ப ராசி, கும்ப லக்னம், சதயம் நட்சத்திரம். எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 கும்ப லக்னக்காரர்களுக்கான ராசிக்கல் நீலக்கற்கள் ஆகும்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

2. பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தால் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா?

🌟 பங்குனி மற்றும் சித்திரை மாதத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தால் குழந்தைக்கு எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படாது.

🌟 பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதைக் கருத்தில் கொண்டு தாய்க்கும், சேய்க்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்பட்டதாகும்.

3. நான் கடக லக்னம், கும்ப ராசி. எந்த ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

🌟 கடக லக்னக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் முத்து ஆகும்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

4. பெண்கள் நவகிரக மோதிரம் அணியலாமா?

🌟 பெண்கள் நவகிரக மோதிரம் அணியலாம்.

🌟 ஆண், பெண் யாராக இருப்பினும் நவகிரக மோதிரம் அணியும் போது சற்று கூடுதல் கவனம் வேண்டும்.

🌟 ஜாதகத்தை நன்கு ஆய்வு செய்து அதற்கு தகுந்தாற்போல் கற்களின் வடிவமைப்பும், உலோகத்தையும் இணைத்து அணிந்தால் மட்டுமே எண்ணிய பலன்களை அளிக்கும்.

🌟 இல்லையேல் சாதகமற்ற சூழல் ஏற்படலாம்.

5. 2ல் செவ்வாய், சந்திரன் இருந்தால் என்ன?

🌟 சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பேசக்கூடியவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.

🌟 எளிதில் எதிலும் திருப்தி அடையமாட்டார்கள்.

🌟 ஆடம்பர செலவுகளை செய்யக்கூடியவர்கள்.

6. லக்னத்திற்கு மூன்றில் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.

🌟 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

7. வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்குமா?

🌟 வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதிக்கும்.

🌟 அரசன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே என்பது சாலப் பொருந்தும்.


Share this valuable content with your friends