👉 சோதிடம் என்பது பல எண்ணற்ற இரகசியங்களை கொண்டுள்ளது. அதைப்போலவே மருத்துவமும் பல சிக்கலான அமைப்புகளை கொண்டுள்ளது. மருத்துவமும், சோதிடமும் ஏறத்தாழ ஒரே இடத்தில் இருந்து பிறக்கின்றன. ஏனெனில், இவை இரண்டும் ஒரே இடத்தில் இருந்து தான் துவங்குகின்றன. அதாவது நவகிரகங்களிடமிருந்து.
👉 அதாவது ஒருவருக்கு ஏற்படும் நோயினை அவரது ஜாதகத்தில் இருந்து இந்த நோயினால் துன்பப்படுவார் என்பதை அறிய இயலும். அதாவது நவகிரகங்களான ஒன்பது கிரகங்களும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் தனக்கென தனிப்பட்ட ஒரு குணத்தையும், உறவுகளையும் கொண்டுள்ளதை அறிந்துள்ளோம். அதைப் போலவே ஒவ்வொரு கிரகமும் தனிப்பட்ட கதிர்களையும் கொண்டு பலவித இன்னல்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவையாகும்.
👉 அதாவது, நமது ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு ராசிகளை நமது உடலை பனிரெண்டு பாகங்களாக பிரித்து வைத்துள்ளனர். லக்னம் முதல் பனிரெண்டாவது ராசி வரை மானிடர்களின் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளையும் விடாமல் குறிப்பிடப்பட்டுள்ளன.
பனிரெண்டு ராசிகளில் நமது உடல் அங்கங்கள்குறிப்பிடப்பட்டுள்ளது எவ்வாறு என காண்போம்.
👉 மேஷம் - தலை
👉 ரிஷபம் - முகம்
👉 மிதுனம் - மார்பு
👉 கடகம் - இருதயம்
👉 சிம்மம் - மேல் வயிறு
👉 கன்னி - இரைப்பை
👉 துலாம் - அடிவயிறு, முதுகு
👉 விருச்சகம் - ஆண் / பெண் பிறப்புறுப்புகள்
👉 தனுசு - தொடை
👉 மகரம் - முழங்கால்
👉 கும்பம் - கணுக்கால்
👉 மீனம் - பாதங்கள்
👉 இவ்விதம் நமது உடல் உறுப்புகள் யாவும் பனிரெண்டு ராசிக்குள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
இதைப்போன்று லக்னம் முதல் நமது உடலானது பனிரெண்டு பாவகங்களில் பிரித்து வைக்கப்பட்டுள்ளதை காண்போம்.
👉 முதல் பாவம் (லக்னம்) - தலை
👉 இரண்டாம் பாவம் - முகம்
👉 மூன்றாம் பாவம் - தோள்
👉 நான்காம் பாவம் - கைகள்
👉 ஐந்தாம் பாவம் - மார்பு, இருதயம்
👉 ஆறாம் பாவம் - ஸ்தனம்
👉 ஏழாம் பாவம் - வயிறு
👉 எட்டாம் பாவம் - ஆண் / பெண் பிறப்புறுப்புகள்
👉 ஒன்பதாம் பாவம் - தொடை
👉 பத்தாம் பாவம் - முழங்கால்
👉 பதினொன்றாம் பாவம் - கணுக்கால்
👉 பனிரெண்டாம் பாவம் - பாதங்கள்.
👉 ஜாதகத்தில் உள்ள பாவகங்கள் குறிப்பிடும் இடத்தினை பற்றி நாம் அறிந்தோம். இதில் ஆறாமிடமாக எந்த பாவகம் வருகிறதோ அந்த பாவகத்தோடு தொடர்புடைய இடத்தில் நோய்கள் தோன்றும்.