No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிரிவலம் செல்பவர்களின் கவனத்திற்கு !!

Aug 25, 2018   Ananthi   510    ஆன்மிகம் 

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்வது வழக்கம். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல் என்பதாகும். கிரிவலம் செல்லும்போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

🌟 ஆவணி மாதம் கிரிவலம் சென்றால் சுபிட்சம் பொங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறலாம்.


கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை :

🌟 மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.

🌟 ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.

🌟 வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது.

🌟 மலையைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.

🌟 மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.

🌟 கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.

🌟 தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது நல்ல பலன் தரும். 🌟 மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.

🌟 தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.

🌟 கிரிவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.

🌟 கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.


Share this valuable content with your friends