1. அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா?
🌟 அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும்.
2. சந்திரன் மற்றும் கேது இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்கள்.
🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.
🌟 கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. சந்திராஷ்டமம் ஒருவருக்கு எத்தனை நாட்கள் இருக்கும்?
🌟 சந்திராஷ்டமம் ஒருவருக்கு 2 1/4 நாட்கள் இருக்கும்.
4. அண்ணன், தம்பி இருவரும் ஒரே ராசி, நட்சத்திரமாக இருக்கலாமா?
🌟 அண்ணன், தம்பி இருவரும் ஒரே ராசி, நட்சத்திரமாக இருக்கலாம்.
5. ஆனி மாதம் குடும்பத்தின் மூத்த பையனுக்கு திருமணம் செய்யலாமா?
🌟 ஆனி மாதம் குடும்பத்தின் மூத்த பையனுக்கு திருமணம் செய்வதை தவிர்க்கவும்.
6. அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.
🌟 மனசாட்சியின்படி எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள்.
🌟 விதிகளுக்கு உட்பட்டு செயல்படக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. சூரியன் நீசம் பெற்றால் என்ன பலன்?
🌟 மற்றவர்களுக்கு இடையூறு செய்வதில் அலாதி விருப்பம் கொண்டவர்கள்.
🌟 சுயநலத்திற்காக எந்த விதமான செயல்களையும் செய்யக்கூடியவர்கள்.
🌟 உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
8. 5ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 புத்திரர்களால் மனவருத்தங்கள் உண்டாகும்.
🌟 வரம்புக்கு மீறிய செலவுகளை செய்யக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.