No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




துர்க்கை அம்மனை கனவில் கண்டால் என்ன பலன்?

Aug 23, 2018   Ananthi   5843    கனவு பலன்கள் 

1. பாம்பு இடது தொடையில் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு கடிப்பது போல் கனவு காண்பது நடக்காத செயல் நடந்து விடுமோ என்ற பயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

2. விபத்தில் ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 விபத்தில் ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால் எதிரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும்.

3. துர்க்கை அம்மனை கனவில் கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 கனவில் துர்க்கை அம்மனை கண்டால் காரிய வெற்றி உண்டாகும் என்று பொருள்.

4. எனது அண்ணாவிற்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்கள் அண்ணாவிற்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 புதிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும்.

5. வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து, நான் சென்று அணைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து நீங்கள் அணைப்பது போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சுபச் செய்திகள் வரும் என்பதைக் குறிக்கிறது.

6. வாகனத்தில் செல்லும்போது பாதையில் முள் பரப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பயணங்களில் இருந்து வந்த சில தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.



Share this valuable content with your friends