No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை துள்ளுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 13, 2020   Ananthi   374    கனவு பலன்கள் 

1. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் கண்டால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

2. இறந்த ஒருவர் என்னை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

3. பசுமாடு விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பசுமாடு விரட்டுவது போல் கனவு கண்டால் புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

4. பணம் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பணம் எடுப்பது போல் கனவு கண்டால் உடனிருப்பவர்களிடம் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. காவல் அதிகாரியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 காவல் அதிகாரியை கனவில் கண்டால் அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

6. சடலத்தை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சடலத்தை எரிப்பது போல் கனவு கண்டால் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.

7. பாம்பு படம் எடுத்து நிற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பாம்பு படம் எடுத்து நிற்பது போல் கனவு கண்டால் விரோதிகளால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

8. நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை துள்ளுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends