No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சரியான வயதில் திருமணம் ஆகாமல் தள்ளி போவதற்கு இதுதான் காரணமா?

Aug 21, 2018   Ananthi   656    வாஸ்து 

படி அமைப்பு என்பது ஒரு வீட்டிற்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும். படி அமைப்பை தவறான இடத்திலும், தவறான அமைப்பிலும் அமைத்து விட்டால் அதைபோல் துன்பத்தையும், கஷ்டத்தையும் கொடுக்ககூடியது இந்த உலகில் எதுவுமில்லை. அதேபோல் இது மிக ஆபத்தானதும் கூட.

நமது வீட்டமைப்பில் எங்கு மாடிபடி அமைப்பு வந்தால் என்ன பலன்கள் என்று பார்க்கலாம் :

வடகிழக்கு படி அமைப்பு :

வடகிழக்கில் மாடிபடி அமைப்பு வருவது மிக மிக ஆபத்தானது. இதில் வீட்டினுள் மற்றும் வெளிப்புற படி இரண்டுமே தவறு.

கிழக்கு நடுப்பகுதி :

மொத்த வீட்டமைப்பில் கிழக்கு நடுப்பகுதியில் மாடிபடி அமைப்பு வருவது என்பது மிக தவறு. இதனால் ஏற்படும் பாதிப்புகள்

1. சரியான வயதில் திருமணம் ஆகாமல் தள்ளி போவது.

2. குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது.

3. அதிகபடியான நோய்களுக்கு மொத்த குடும்பமே ஆட்கொள்ளப்படுவது.

தென்கிழக்கு படி அமைப்பு :

இந்த பகுதியில் வீட்டிற்குள் படி அமைப்பு வருவது என்பது மிக மிக ஆபத்தானவை (வெளிபுற படி அமைப்பு மட்டும் கெடுதல் செய்யாமல் இருக்கும். அதுவும் கேண்டிலிவர் முறை மிகவும் சிறந்தது.) தவறான படியினால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படக்கூடும். போலீஸ் கேஸ், கோர்ட் கேஸ், திருட்டு, நெருப்பால் ஆபத்து போன்றவை ஏற்படக்கூடும்.

தெற்கு நடுப்பகுதி, தென்மேற்கு :

இந்த பகுதியில் வீட்டினுள் உள்படி அமைப்பு வருவது என்பது மிக மிக ஆபத்தானவை. இதனால் ஏற்படும் பாதிப்புகள்

1. கணவன், மனைவி உறவில் கடுமையான விரிசல்.

2. பொருளாதார பின்னடைவு, தீராத கடன், வறுமை ஏற்படுவது.

3. நாணயத்தை இழப்பது.

மேற்கு நடுப்பகுதி, வடமேற்கு வடக்கு நடுப்பகுதி :

இந்த பகுதியில் மாடிபடி அமைப்பு வருவது என்பது மிக மிக தவறு. இதனால் ஏற்படும் பாதிப்புகள்

1. ஆண், பெண் இருவருக்குமே நாணயம் கெட்டுவிடுதல்.

2. கடனுக்காக ஊரை விட்டு வெளியேறுதல்.

3. கடனுக்காக சொத்து ஏலம் போகுதல்.

4. குழந்தை பாக்கியம் இல்லாமல்; தத்து எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவது.

5. அவப்பெயருடன் கூடிய திருமணம் நடப்பது.

எந்த ஒரு கட்டிடத்திற்கும் மாடிபடி அமைப்பை நேரில் ஆய்வு செய்யாமல் மாடிபடி அமைப்பை மட்டும் 100க்கு 100 சதவீதம் சரிசெய்து கொடுக்க முடியாது.


Share this valuable content with your friends