No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காலைப்பொழுதில் கழுதையை பார்த்தால் நல்லதா? கெட்டதா?

Aug 21, 2018   Ananthi   500    ஜோதிடர் பதில்கள் 

1. எனக்கும், என் மாமியாருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக நிறைய கஷ்டங்களை தாங்கி கொண்டு இருக்கிறேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟வயதில் மூத்தவர்களுடன் அனுசரித்து செல்லவும்.

🌟முடியாத பட்சத்தில் அவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்த்து அமைதியுடன் இருக்கவும்.

🌟சந்திர பகவானை திங்கட்கிழமையன்று வழிபட்டு வரவும்.

🌟பிரதோஷ தினத்தில் நரசிம்மரை வழிபட்டு வரவும்.

2. காலைப்பொழுதில் கழுதையை பார்த்தால் நல்லதா? கெட்டதா?

🌟காலைப்பொழுதில் கழுதையை பார்ப்பது நல்லது.

3. என் மகன் 2015 அக்டோபர் மாதம் 18ஆம் தேதி மகாளய அமாவாசைக்கு பிறகு வந்த பஞ்சமி திதியில் இறைவனடி சேர்ந்தார். நாங்கள் ஒவ்வொரு வருடமும் அதே திதியில் தர்ப்பணம் கொடுக்கிறோம். இது சரியா? தவறா?

🌟இறந்தவர்களுக்கு தர்ப்பணம் அவர்கள் மரணமடைந்த திதியில் கொடுப்பது சிறப்பாகும்.

🌟நீங்கள் சரியாகத் தான் செய்து கொண்டு வருகிறீர்கள். அதை தொடர்ந்து செய்து வரவும்.

4. ஆணிற்கு ￰கடக ராசி, பெண்ணிற்கு மிதுன ராசி, திருமணம் செய்யலாமா? ஆணிற்கு நாக தோஷம், செவ்வாய் தோஷம் இருக்கிறது. பெண்ணிற்கு எந்த தோஷமும் இல்லை திருமணம் செய்யலாமா?

🌟ஆணிற்கு ￰கடகம் ராசி, பெண்ணிற்கு மிதுனம் ராசி திருமணம் செய்யலாம்.

🌟ஆனால், தோஷம் உள்ள ஜாதகத்திற்கு தோஷம் உள்ள ஜாதகத்தை மட்டும் இணைப்பதே சரியானதாகும்.

5. லக்னத்தில் செவ்வாய், கேது இருந்தால் என்ன பலன்?

🌟முரட்டு சுபாவமும், பிடிவாத குணமும் உடையவர்கள்.

🌟எதிர்ப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்.

🌟பல விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟ஒருவிதமான கவலையை கொண்டவர்கள்.

6. என் மனைவி 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாள். இப்போது நான் என் அம்மாவுக்கு திதி கொடுக்கலாமா?

🌟உங்கள் மனைவி 3 மாதம் கர்ப்பமாக இருக்கும்போது உங்கள் அம்மாவுக்கு திதி கொடுக்கலாம்.
>


Share this valuable content with your friends