No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் சிறப்புகள் !!

Aug 17, 2018   Ananthi   778    ஆன்மிகம் 

ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்த பின்பு வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக காணப்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

🌟 ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக பெரியோர்கள் சொல்வார்கள். அர்ஜுனனுக்கு ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. ஞாயிறு என்றாலே சூரியன் .

🌟 ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமானது.

🌟 ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் விரதத்தை அனுஷ்டித்து வந்தனர்.

🌟 இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் மேலும் நன்மை உண்டாகும்.


Share this valuable content with your friends