No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாத வளர்பிறை!!

Aug 17, 2018   Ananthi   561    ஆன்மிகம் 

ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதை போல் ஆவணி மாதம் மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். இத்தகைய சிறப்புகள் நிறைந்த ஆவணி மாதத்தில் வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஏன் தெரியுமா?

🌟 ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில் சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார்.

🌟 சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர்.

🌟 எனவே தான் ஆவணி மாதத்தில் கிகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம், திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.

🌟 விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

🌟 ஜோதிட முறைப்படி பார்க்கும் போது சூரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம்.



Share this valuable content with your friends