No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் பீரோவை எங்கு வைக்க வேண்டும்?.

Apr 27, 2020   Ananthi   353    ஜோதிடர் பதில்கள் 

1. சித்திரை மாதத்தில் புதிய வீடு வாங்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் புதிய வீடு வாங்கலாம்.

2. 7ல் குரு நீசம் பெற்றால் திருமண வாழ்க்கை நன்றாக அமையாதா?

🌟 ஒரு கிரகத்தின் நிலையை கொண்டு திருமண வாழ்க்கையை பற்றி கூறுவது நன்றன்று.

3. ராகு திசையில், செவ்வாய் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 செவ்வாய் பலமாக இருக்கும் பட்சத்தில் வாகன யோகம் அமையும்.

🌟 செல்வச்சேர்க்கை உண்டாகும்.

🌟 எதிர்பார்த்த பதவி உயர்வு சாதகமாக அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 11ல் ராகு, குரு மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 பொருள் ஈட்டும் திறமை கொண்டவர்கள்.

🌟 தந்தைவழி உறவுகளால் ஆதரவு உண்டாகும்.

🌟 இளகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சுக்கிரன், கேது இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 புண்ணிய தலங்களை தரிசிக்கக்கூடியவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. வீட்டில் பீரோவை எங்கு வைக்க வேண்டும்?

🌟 வீட்டில் பீரோவை நைருதி மூலையில் வைக்க வேண்டும்.



Share this valuable content with your friends