No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மீன ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 17, 2018   Ananthi   534    நவ கிரகங்கள் 

🌟 மீனம் ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். குருவுடன் புதன் நட்பு என்னும் நிலையில் இருந்தாலும் குருபகவான் புதனை பகைவராக எண்ணுகின்றார். அதனால் இங்கு புதன் சமம் என்னும் நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை விரிவாக காண்போம்.

🌟 துணைவிக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

🌟 இவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளை அறிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமாகும்.

🌟 எதையும் மனம் விட்டு பேச மாட்டார்கள். பல வார்த்தைகள் எதிரில் இருப்போர் பல பேசினாலும் இவர் சில வார்த்தைகளை மட்டுமே பேசக்கூடியவர்கள்.

🌟 இவர்களிடம் எதிலும் உறுதி வாங்குவது என்பது கடினம்.

🌟 எதிர்காலம் பற்றி நன்கு அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எதிலும் எங்கும் சிக்கனத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 எவரையும் தனது செயல்பாடுகளில் ஒரு வரையறைக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள்.

🌟 தொழிலில் நுணுக்கமான விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 பிறருடைய சொத்துக்கள் இவர்களை நாடி வரக்கூடிய அதிர்ஷ்டம் உடையவர்கள்.

🌟 எப்பொழுதும் பிறரை கவரும் வண்ணம் உடையும், வாசனை திரவிய பயன்பாட்டையும் உடையவர்கள்.

🌟 தனக்கு வேண்டியதை பிறருடைய செயல்பாடுகளில் நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 பொதுநலம் சம்பந்தமான எண்ணங்கள் மிகவும் குறைவு. எதிலும் ஆதாயம் தேடக்கூடியவர்கள்.

🌟 வாழ்க்கையை சுகமாக ரசித்து வாழ எந்த நிலைக்கும் செல்லக்கூடியவர்கள்.

🌟 விதண்டாவாதமும், அஞ்ஞான எண்ணங்களும் நிரம்பியவர்கள்.



Share this valuable content with your friends