No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆவணி மாதத்தின் சிறப்புகள்!!

Aug 17, 2018   Ananthi   563    ஆன்மிகம் 

ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால், ஆவணியில் சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும்.

ஆவணி மாதத்தின் சிறப்பம்சங்கள் :

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வார்கள்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி பூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பூணூலைக் கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வார்கள்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. விநாயகரைப் போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும்.

ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு

ஆவணி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.

விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வார்கள்.

இத்தகைய சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகிப் பூஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோம்.


Share this valuable content with your friends


Tags

ஜூலை 18 அமைவிடம் பெண் தெய்வம் 01.03.2019 Rasipalan in pdf Format !! இளநீர் கோவிலுக்கு நடந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? மதிப்பு அதிகரிக்கும் அடிக்கடி நான் பறப்பது போல் sanhiran சனிப்பெயர்ச்சி... யோகச் சனி... யோகத்தை தருமா?... poosam தினசரி ராசிபலன் விருச்சக ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது? கல்பனா சாவ்லா மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு தேதி குறித்து மண்டபம் பார்க்கலாமா? குழந்தைக்கு வளையல் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முயற்சி பழைய சிவன் கோவிலில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 13ஆம் தேதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்?.