No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் தினமும் ஆண்கள் விளக்கேற்றலாமா?

Aug 17, 2018   Ananthi   3110    ஜோதிடர் பதில்கள் 

1. வீட்டில் தினமும் ஆண்கள் விளக்கேற்றலாமா?

🌷 வீட்டில் பெண்கள் விளக்கேற்ற முடியாத சூழலில் மட்டும் ஆண்கள் விளக்கேற்ற வேண்டும்.

🌷 மற்ற காலங்களில் பெண்கள் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

2. மாந்திரீகம் என்றால் என்ன?

🌷 மாந்திரீகம் என்பது நமது மனதை ஒருநிலைப்படுத்தி மந்திரங்களை மனதால் எண்ணி நமக்கு வேண்டிய செயலை அடைவதாகும்.

3. ஆந்தை வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?

🌷 ஆந்தை வீட்டிற்குள் வருவது நல்லதல்ல. ஏனெனில் ஆந்தை பழுதுப்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பறவையாகும்.

4. ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.

🌷 ஜாதகம் என்பது உண்மையானதாகும். ஆனால், ஜாதகத்தை கணித்து சொல்லும் ஜோதிடர்கள் என்பவர்கள் பல நபர்கள் ஆவார்கள்.

🌷 ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் மாறுபடுவதால் அவர்கள் எடுத்துரைக்கும் விதமும் மாறுபடும்.

🌷 ஆனால், பலரின் கூற்றுகளை கூர்ந்து கவனித்தால் அவர்கள் சொல்லவரும் கருத்தானது ஒன்றாக இருக்கும்.

5. பெண்ணுடைய மேல் உதட்டில் வலப்புறம் மச்சம் உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌷 தெய்வ பக்தி உடையவர்கள்.

🌷 எடுத்த காரியத்தை சிரம் ஏற்றி முடிக்கக்கூடியவர்கள்.

🌷 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.

🌷 நேர்மையும், பொறுமையும் உடையவர்கள்.

6. என் மனைவி வெள்ளிக்கிழமையன்று ராமேஸ்வரம் கடலில், காலில் இருந்த மெட்டியை தவறுதலாக விட்டு விட்டார். இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?

🌷 கவனக்குறைவால் தொலைந்தால் எந்தவித தீங்கும் இல்லை.



Share this valuable content with your friends