5ல் ராகு இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகுமா?
Apr 15, 2020 Ananthi 298 ஜோதிடர் பதில்கள்
1. 5ல் ராகு இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகுமா?
🌟 குழந்தை பாக்கியம் என்பது ஒரு கிரகத்தின் அமைப்பை மட்டும் வைத்து கூற இயலாது.
2. 4ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமா?
🌟 4ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். சில விதிவிலக்குகளை கொண்டே தெளிவாகக் கூற இயலும்.
3. 3ல் சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.
🌟 தாயின் உடல்நலத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும்.
🌟 பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 7ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 தன் விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.
🌟 எதிலும் நிறைவு என்பது இல்லாதவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 மன உறுதி கொண்டவர்கள்.
🌟 காது தொடர்பான கோளாறுகள் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 12ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 தயக்கம் கொண்டவர்கள்.
🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.