1. என் மனதில் எண்ணிய எண்ணங்கள் பலிக்குமா?
🌟 எண்ணம் போல் வாழ்க்கையாகும். நாம் நினைக்கும் எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும்.
2. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஏன் தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது?
🌟 ஒருவரின் திருமண வாழ்க்கை தடைபடுவதற்கு அல்லது தாமதப்படுவதற்கு அவரவர் புரிந்த கர்ம வினைகளே முதன்மை காரணமாகும்.
🌟 மேலும், நம்முடைய முன்னோர்கள் செய்த செயல்களும் ஒரு காரணமாகும்.
🌟 திருமணம் தாமதப்படுகிறது என்றால் ஜாதக ரீதியான பிரச்சனைகள் உள்ளதா? என ஆய்வு செய்து சரியான பரிகாரம் செய்து வர தடைகள் அகலும்.
3. பழைய நிலை கதவுகளை விலைக்கு வாங்கி வீடு மற்றும் கடைகளுக்கு வைக்கலாமா?
🌟 புதிய வீடு மற்றும் கடைகளுக்கு என்றுமே பழைய நிலை கதவு மற்றும் ஜன்னலை வைக்கக்கூடாது.
4. மனதை கையாளுவது எப்படி?
🌟 மனதில் உள்ள எண்ணங்கள் என்பது கடலை காட்டிலும் மிகவும் பரந்த பரப்பினை உடையது.
🌟 எனவே, அதை கையாளுவதற்கான மிகவும் எளிய முறை தியானம் செய்வது மட்டுமே. ஆகவே, தியானத்தை மேற்கொள்ளுங்கள்.
5. புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டும்போது குடும்பத் தலைவரின் ஜாதகப் பலனை கணித்து கட்ட வேண்டுமா? இல்லை குழந்தைகள் அல்லது மனைவியின் ஜாதக அமைப்பை கணித்து கட்ட வேண்டுமா?
🌟 குடும்பத் தலைவரின் ஜாதகத்தை கணித்து அதன் அடிப்படையில் கட்ட வேண்டும்.
6. கோவிலின் நிழல் வீட்டின் மேல் விழுந்தால் என்ன செய்வது?
🌟 கோவிலின் நிழல் வீட்டின் மேல் விழுந்தால் அந்த வீட்டில் குடி இருப்பதை தவிர்க்கவும் அல்லது வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
🌟 வீட்டில் அசைவ உணவுகளை தவிர்த்தல் வேண்டும்.