🌟 நம் முன்னோர்கள் நமக்காக அளித்துச்சென்ற பல எளிய செயல்களில் உள்ள அறிவியலை உணராமல் அந்நிய நாட்டு மோகத்தால் நாம் இழந்தவைகள் எண்ணில் அடங்காதவை. விவசாயம், கல்வி என அனைத்திலும் நம் பாரம்பரிய முறைகளை புறக்கணித்தது மட்டுமல்லாமல் நம் ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களிலும் மேலை நாட்டு மோகத்தை பின்பற்ற தொடங்கியுள்ளோம்.
🌟 நம் முன்னோர்கள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வயதில் பெரியவர், சிறியவர் என எவரைக் கண்டாலும் இரு கைகளை கூப்பி வணக்கம் என்று கூறுவார்கள். ஆனால், இன்றைய நிலையோ வேறு. நாம் யாரைக் கண்டாலும் இரு கைகளை இணைத்து வணக்கம் கூறாமல், மாறாக நாமும் அவரும் கைக்குலுக்கி கொள்வதே உயர்ந்த மரபு என்று நினைக்கின்றோம்.
🌟 அந்த உயர்ந்த மரபில் உள்ள விளைவுகளை பற்றி யாரும் அறிவதில்லை. இதில் என்ன விளைவு உள்ளது என நினைக்கிறீர்களா?
🌟 இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒளிவட்டம் உள்ளது. நம் வீட்டில் உள்ள இறைவனின் வரைபடங்களில் அவரின் தலைக்கு பின்னே உள்ள ஒளிவட்டம் போன்று சூட்சம நிலையில் இருக்கும். அந்த ஒளிவட்டம் ஆறா என்று அழைக்கப்படுகின்றது. நாம் கைக்குலுக்கும்போது நமது கைகள் மட்டும் இணையாமல் அவரவர்களின் ஒளிவட்டம் எனப்படும் ஆறாவும் இணைக்கின்றது. ஒருவரின் ஆறாவானது மற்றவர்களை தொடும்போது அவர்களின் ஆறாவினால் நமது ஆறாவும், அவர்களின் ஆறாவும் சலனப்பட்டு பாதிக்கப்படுகின்றது.
🌟 இருவரின் ஒளிவட்டங்களான ஆறா பாதிக்கப்படுவதை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் இதை தவிர்க்கும் விதமாக வணக்கம் செலுத்தும் முறையை அனைவரிடத்திலும் அக்காலத்தில் கொண்டு வந்தார்கள்.
வணக்கம் = வா + இணக்கம்
🌟 தங்களின் வருகையையும், அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதே இதன் உட்பொருளாகும். இனி வணக்கம் செலுத்தும் முறையை பற்றி காண்போம்.
🌟 நம்மையும், இந்த பிரபஞ்சத்தையும் படைத்த அனைவருக்கும் மேலான இறைவனை வணங்கும்போது நம்முடைய கைகளை சிரசின் மேல் உயர்த்தி வணங்க வேண்டும்.
🌟 நம்மை நெறிப்படுத்தவும், நல்லது கெட்டது என பிரித்து பார்க்கக்கூடிய பகுத்தறிவையும், ஞானத்தையும் கற்றுக்கொடுத்த ஆசிரியரை (குருவை) வணங்கும்போது இரு கரங்களை நெற்றிக்கு நேராக கைக்கூப்பி வணங்க வேண்டும்.
🌟 நாம் பிறப்பதற்கு காரணமான தந்தையையும், நம்மை வழிநடத்தி செல்லும் வேந்தனையும் வணங்கும்போது முகத்திற்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.
🌟 மதியால் உயர்ந்த சான்றோர்களை வணங்கும்போது சிரம் தாழ்ந்து மார்புக்கு நேராக கைக்கூப்பி வணங்க வேண்டும்.
🌟 வயதில் சிறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் விருந்தினரை வணங்கும்போது இதயத்திற்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.
🌟 நமக்கு தொப்புள் கொடி மூலம் உணவையும், உயிரையும் கொடுத்து நம்மை பெற்றெடுத்த அன்னையை வணங்கும்போது தொப்புள் கொடிக்கு நேராக இரு கரங்களை கூப்பி வணங்க வேண்டும்.
🌟 இதுவே, நம்முடைய முன்னோர்கள் வணங்கிய முறைகள் ஆகும். இதுவே நம்முடைய அடையாளமும், மரபும் கூட.
🌟 ஆகவே, இன்று முதல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு இந்த பழக்கத்தை கற்றுக்கொடுத்து யாருடைய ஒளிவட்டத்தையும், பாதிக்காமல் அனைவரும் இருகரம் கூப்பி அன்போடு வணங்குவோம்!!..