No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புலியை கனவில் கண்டால் என்ன பலன்?.

Mar 20, 2020   Ananthi   13071    கனவு பலன்கள் 

1. ஒரு குழந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஒரு குழந்தை அழுவது போல் கனவு கண்டால் பொருளாதாரம் மற்றும் புதிய முதலீடுகள் சார்ந்த கணக்குகளில் பெரியோர்களின் ஆலோசனை பெற்று முடிவு செய்வது நன்மையளிக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. ஒருவரின் படுக்கையறைக்கு நான் சென்றது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எவருக்கும் சம்பந்தமில்லாத புதிய துறைகளின் மீது ஆர்வமும், அதை சார்ந்த தேடலும் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. புலியை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 புலியை கனவில் கண்டால் நண்பர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

🌟 மேலும் தேவையற்ற கருத்துக்களை பரிமாறுவதை தவிர்ப்பது நன்மையளிக்கும் என்பதை குறிக்கின்றது.

4. சீட்டு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சீட்டு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. ஆண்மகன் ஒருவர் நிர்வாணமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதிற்கு பிடிக்காத சில சம்பவங்கள் நடைபெறுவதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. எனது கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் விருப்பமில்லாத செயல்பாடுகளால் விரயங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends