சிவலிங்கத்தை தொடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
Mar 17, 2020 Ananthi 390 கனவு பலன்கள்
1. விதவைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
2. இறந்தவர்கள் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இறந்தவர்கள் மீண்டும் இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
3. இறந்தவர் சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இறந்தவர் சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் நடந்து முடிந்த செயல்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் அகலும் என்பதைக் குறிக்கின்றது.
4. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கீழே விழுவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
6. வாழைமரம் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 வாழைமரம் விழுவது போல் கனவு கண்டால் பெரியோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
7. சிவலிங்கத்தை தொடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 சிவலிங்கத்தை தொடுவது போல் கனவு கண்டால் செல்வ வசதி மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.
8. பூக்கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பூக்கட்டுவது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
9. பெரிய கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பெரிய கட்டிடம் இடிந்து விழுவது போல் கனவு கண்டால் உறவுகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.