No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்?

Aug 14, 2018   Ananthi   1961    கனவு பலன்கள் 

1. என்னுடைய மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணுடன் திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று கவனத்துடன் இருக்கவும்.

2. ஒரு குழந்தையை கையில் எடுப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 குழந்தையை கனவில் காண்பது சுபிட்சமாகும்.

🌟 புதிய பொருட்சேர்க்கை மற்றும் பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு போன்ற சுபச் செயல்கள் நடைபெறும்.

3. எனது ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களின் ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் சுபச் செய்திகள் விரைவில் நடைபெறும்.

🌟 உங்களின் மீது இருந்த அவப்பெயர்கள் நீங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.

4. என் மனைவியின் கனவில் அடிக்கடி பாம்பு வருகிறது என்று கூறுகிறார். இதற்கு என்ன பலன்?

🌟 பாம்பை கனவில் காண்பது நெருங்கிய நண்பர்கள் மூலம் மனக்கசப்புகளோ அல்லது பொருள் இழப்போ ஏற்படும் என்பதை குறிக்கிறது.

🌟 புதிய சூழலால் சில சங்கடங்கள் உண்டாகும்.

5. நெருங்கிய நபர்கள் நம்மை பார்க்காமல் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்களை வருத்திக் கொண்டிருந்த கவலைகள் கூடிய விரைவில் நீங்கும்.

🌟 அனைவரிடமும் நிதானமாகவும், அனுசரித்தும் நடந்து கொள்ளவும்.

6. மலத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மலத்தை கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

7. பேய்-யுடன் சண்டை போடுவது போல் அடிக்கடி கனவு வருகிறது. இதற்கு என்ன பலன்?

🌟 பேய்-யுடன் சண்டை போடுவது போல் அடிக்கடி கனவு வந்தால் மனதில் மறைத்து வைத்திருந்த ரகசியம் வெளிப்படும் என்பதை உணர்த்துகிறது.


Share this valuable content with your friends