No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமா?

Aug 14, 2018   Ananthi   6449    ஜோதிடர் பதில்கள் 

1. காதலில் வெற்றி பெற ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும்?

🌟 அரசும், வேம்பும் பின்னி வளர்ந்துள்ள விருட்சத்திற்கு அடியில் உள்ள விநாயகரை வணங்கி வந்தால் காதலில் ஏற்பட்ட தடைகள் நீங்கி காதலில் வெற்றி கிடைக்கும்.

🌟 அசோகப் பூவினால் மாலைக்கட்டி விநாயகருக்கு அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கி வந்தால் காதல் கைகூடும்.

2. என் மனைவி 5 மாத கர்ப்பிணி பெண். ஆனால், தனி குடித்தனம் போக வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். போகலாமா? வேண்டாமா?

🌟 கர்ப்ப காலங்களில் புதிய வீடுகளுக்கு குடிப்பெயர்வது, கிரகப்பிரவேசம் செய்வது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.

3. ஆடி மாதத்தில் வயதிற்கு (பூப்பெய்தல்) வரலாமா?

🌟 ஆடி மாதத்தில் வயதிற்கு வரலாம்.

4. மேற்கு திசையை பார்த்த வாசல் எந்த லக்னக்காரர்கள் வைக்கலாம்?

🌟 மேற்கு திசையை பார்த்த வாசல் மிதுனம், கன்னி மற்றும் கும்பம் போன்ற லக்னக்காரர்கள் வைத்துக்கொள்ளலாம்.

5. எனக்கும், என் கணவருக்கும் ஒரே ராசி, ஒரே லக்னம். நட்சத்திரம் மட்டும் இருவருக்கும் வேறு. நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 முதலில் தம்பதி இருவருக்கிடையே எதனால் பிரச்சனைகள் உண்டாகின்றது என்பதை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்வது சிறப்பானதாகும்.

🌟 கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்ல பலனை அளிக்கும்.

🌟 திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரை தம்பதிகளாக வந்து வழிபட்டு வர ஒற்றுமைகள் உண்டாகும்.

6. என் கணவர் சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் என்ன மாதிரியான தொழில் அமையும்?

🌟 ஒருவரின் தொழில் அமைப்பு என்பது ராசியை கொண்டு பார்ப்பதை காட்டிலும், லக்னத்தை அடிப்படையாக கொண்டு பார்ப்பது சிறப்பான பலனைத் தரும்.

🌟 அரசு சார்ந்த பணிகள், சுய தொழில் செய்தல், துணி வியாபாரம், இசைக் கலைஞர், வழக்கறிஞர் பணி, தானியங்களை தயாரித்தல் மற்றும் மூலிகை சம்பந்தமான மருந்துக்களை தயாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

7. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமா?

🌟 லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

🌟 குடும்ப பாவகங்களில் இருந்தால் மட்டுமே தோஷமாகும்.



Share this valuable content with your friends


Tags

இந்த அமைப்புகளை தவிர்த்தால் வீட்டில் மங்கள இசை கேட்குமா? uncle அலெசான்றோ வோல்ட்டா பூராடம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? இராமலிங்கசுவாமி dog லக்னத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமா? பல்லி வலது காலில் விழுந்தால் என்ன பலன்? வாகன விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவர் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திராஷ்டம தினத்தில் காளஹஸ்தியில் ராகு pukaippatam நெருங்கிய நபர்கள் நம்மை பார்க்காமல் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? வனத்தை திருத்தி அமைத்தல் 7ல் குரு தனித்து இருந்தால் திருமண வாழ்க்கையில் 24.05.2021 - 30.05.2021 Weekly rasipalan in PDF Format!!!! இறந்துப்போன என் பாட்டியிடம் பணம் கொடுத்து நெய் வாங்குவது போல் கனவு கண்டால் வார ராசிபலன்கள் (29.04.2019 - 05.05.2019) PDF வடிவில் !! 28.10.2019 Rasipalan in pdf format!! சிங்கத்திற்கு உயிர் கொடுத்த மூவர்