1. ரிஷப லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருப்பது நன்மையா? தீமையா?
🌷 ரிஷப லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருப்பது நன்மையையும், தீமையையும் கொண்டதாகும்.
2. வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா?
🌷 வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணிவதை காட்டிலும் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தவர்கள் அணிவது சிறப்பானதாகும்.
3. எங்கள் வீட்டின் முன் பாம்பு ஒன்று வந்து இறந்து விட்டது. இதனால் தீமை ஏதும் ஏற்படுமா? நாங்கள் அதை அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லை. அது இறந்த பின் அதற்கான சடங்குகள் செய்து புதைத்து விட்டோம். இருப்பினும் தீமை ஏற்படுமா? அது கோதுமை சாரை பாம்பு என்று கூறினார்கள்.
🌷 உங்களுக்கு எந்த விதமான கவலைகளும் வேண்டாம். துன்பங்கள் ஏதும் ஏற்படாது.
4. வீட்டில் வளர்க்கும் துளசி செடி காய்ந்தால் என்ன பலன்?
🌷 வீட்டில் வளர்க்கும் துளசி செடி காய்வது என்பது சுபமானது அல்ல.
🌷 எனவே, துளசி செடியை காயாமல் பார்த்துக் கொள்ளவும்.
5. எனக்கு 5ல் கேது, 9ல் சுக்கிரன், 11ல் புதன் மற்றும் 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌷 வியாபாரத்தில் பல வகையில் இலாபம் உண்டாகும்.
🌷 வசதியான வாழ்க்கை வாழ்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.
🌷 விரயச் செலவுகள் அதிகம் செய்யக்கூடியவர்கள்.
🌷 அவசர செயல்களால் தன் பெயரை தானே கெடுத்துக்கொள்ளக் கூடியவர்கள்.
6. கும்ப லக்னத்தில் புதன், சூரியன், சனி மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌷 எடுத்த காரியத்தை வைராக்கியத்துடன் செய்து முடிப்பவர்கள்.
🌷 இனிமையான பேச்சுகளை கொண்டவர்கள்.
🌷 எதிர்ப்புகளுக்கு அஞ்சாதவர்கள்.
🌷 அலைச்சல் அதிகம் உடையவர்கள்.