No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்?

Feb 03, 2020   Ananthi   480    கனவு பலன்கள் 

1. காய்கறிகள் எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காய்கறிகள் எடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த செயல்களின் மூலம் எண்ணிய முடிவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

2. ரூபாய் நோட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ரூபாய் நோட்டை கனவில் கண்டால் கொடுக்கல் - வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சிவலிங்கத்தை கனவில் கண்டால் ஆன்மிகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருநங்கையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 திருநங்கையை கனவில் கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. தண்ணீரை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 தண்ணீரை கனவில் கண்டால் மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.

6. நகையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 நகையை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.



Share this valuable content with your friends