No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிதுன ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 10, 2018   Ananthi   430    நவ கிரகங்கள் 

🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். புதன் தன் வீட்டில் பலம் பெறுவதால் உண்டாகும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 எளிதில் அனைவரையும் கவரும் தோற்றம் உடையவர்கள்.

🌟 பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 எந்தவிதமான இன்னல்களிலும் அகப்படாதவர்கள்.

🌟 நகைச்சுவை கலந்த பேச்சுகளால் அனைத்து விதமான சூழல்களையும் எளிமையாக கையாளக்கூடியவர்கள்.

🌟 எல்லாத் துறைகளிலும் திறமை உடையவர்கள். குறிப்பாக கணிதம் சார்ந்த துறைகளில் விருப்பமும், வெற்றியும் அடையக்கூடியவர்கள்.

🌟 உடல் வலிமை உடையவர்கள்.

🌟 அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள். ஆனால், அவரவர் தகுதிக்கு தகுந்தாற்போல் செய்யக்கூடியவர்கள்.

🌟 எந்நிலையிலும் தன் நிலையை மறக்காதவர்கள்.

🌟 ஏமாற்றுபவர்களை கண்டால் எதிர்ப்பவர்கள்.

🌟 நினைவு திறன் உடையவர்கள். வைராக்கிய குணம் உடையவர்கள்.

🌟 இன்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். இன்னல்களை ஆரம்பத்திலே கண்டறிந்து தடுக்கக்கூடியவர்கள்.

🌟 அம்மாவின் மீது மிகுந்த அன்பும், பாசமும் உடையவர்கள்.

🌟 வாழும் வீடு மற்றும் இடங்களை கலை ரசனையுடன் அமைத்துக்கொள்ள கூடியவர்கள்.

🌟 எண்ணிய செயல்களில் எளிதில் வெற்றி அடையக்கூடியவர்கள்.

🌟 கால்நடை செல்வங்கள் மற்றும் வாகன வசதிகள் போன்ற அமைப்புடன் வாழக்கூடியவர்கள்.

🌟 இறைவன் மீது பற்றும், நம்பிக்கையையும் உடையவர்கள்.

🌟 விசித்திரமான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 தீர்க்கமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். தோல்விகள் ஏற்பட்டாலும் அதற்கான காரணத்தை கண்டறிந்து வெற்றியாக மாற்றக்கூடியவர்கள்.

🌟 எங்கும் எதிலும் எவரையும் அளவாக வைத்துக் கொள்வார்கள்.



Share this valuable content with your friends