No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துப்படி பணவரவை தரும் அமைப்பு..!!

Jan 21, 2020   Malini   411    வாஸ்து 

🏠பணம் பணம் எல்லாம், பண மயம். வாஸ்து அமைப்பில் நம் வீடு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

🏠காலத்தின் ஓட்டத்தில் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் பற்றி கவலைப்படாமல் வேலை நிமிர்த்தமாக இன்று தீப்பெட்டி போல் அடுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகிறோம்.

🏠முன்னோர்களின் வாழ்வியல் முறைப்படி இயற்கை வழங்கும் ஒளி ஆற்றலையும், காற்று ஆற்றலையும் நாம் வசிக்கும் வீட்டில் தகுந்த முறைப்படி உள்வாங்கும்போது அங்கு வாழ்பவர்களின் எண்ணமும், செயலும் தனித்துவம் அடைகிறது.

🏠இயற்கையோடு இசைந்த வாஸ்து அமைப்பு உள்ள இல்லங்களே ஆரோக்கியமான, ஆனந்தமான, வளமான வாழ்வு தரும் என்பதற்கு 100 வயதுக்கு மேல் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த, வாழ்ந்து காட்டிய நம் முன்னோர்களே சான்று.

🏠பணத்தை தேடாத மனிதன் இன்று உலகில் உண்டா? அப்படி இல்லையென்றால் பணம் படைத்த அனைவரும் வாழ்க்கை முழுமை அடைந்ததாக எண்ணுகிறார்களா? தேடல் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.

🏠உதாரணமாக, ஒரு வீட்டில் கிழக்கிலும், வடக்கிலும் அதிகமான காலியிடம் மற்றும் ஜன்னல்கள் இருந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தும். மேலும் அதிர்ஷ்டத்தை கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவர்களின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருக்கும். அதுவே ஒரு வீட்டில் தென்மேற்கு பகுதியில் ஏதேனும் தவறு இருந்தால் பணவரவுகள் அதிகப்படியாக பாதிக்கும். உதாரணமாக, வீட்டில் சமையலறை அல்லது கழிவறை தென்மேற்கில் இருந்தாலோ அல்லது தொழில் கூடங்களில் தவறான பார்வை அல்லது தெருக்குத்து இருக்கும் பட்சத்தில் பண முடக்கம், பணவிரயம் அதிகப்படியாக ஏற்படும்.

🏠ஒருவேளை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதோ அல்லது ஜாமீன் கையெழுத்து போன்று ஏதேனும் இருந்தால் அதுவும் விரயமே. நிச்சயம் உங்கள் வீட்டில் வடக்கும், மேற்கும் சந்திக்கக்கூடிய வடமேற்கு மூலையில் மிகப்பெரிய தவறு இருக்கலாம். உதாரணமாக, வடமேற்கு கூரை பகுதி தாழ்வாக (Low Ceiling) இருப்பது.

🏠வாழ்க்கையில் பணம் என்பது மிக இன்றியமையாதது. அதுவும் நம் உழைப்பின் மூலமாக வரும் பணம் நல்ல சுபச் செலவுகளுக்காக செலவு செய்ய வேண்டுமே தவிர, விரைய செலவாகவும், வீண் செலவாகவும் இருக்கக்கூடாது.



Share this valuable content with your friends