No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காதல் திருமணம் செய்தவர்களின் வீட்டு அமைப்பு இப்படிதான் இருக்குமா?

Jan 09, 2020   Malini   339    வாஸ்து 

1.வடமேற்கு தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் வருவது.

2.தங்களது வீட்டின் வடமேற்கு பகுதியில் நீர் நிலைகள் வருவது. உதாரணமாக, குளம், குட்டை, ஆறு, ஓடை, கிணறு, போர்வெல் போன்ற அமைப்புகள்.

3.வடமேற்கு தாழ்வான அமைப்பில் இருப்பது.

4.வடமேற்கு பகுதியில் தாழ்வான போர்டிகோ அமைப்பு வருவது.

5.வடமேற்கு உள்மூலை படி அமைத்து இருப்பது.

🏠பத்து மாதம் சுமந்து கற்பனைகளுடனும், கனவுகளுடனும் ஈன்றெடுத்த குழந்தைகளை பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, பார்த்து பார்த்து வளர்த்த பின்னர் காதல் என்ற வலையில் சிக்கியபின் குடும்பத்தை விட்டு பிள்ளைகள் விலகும்போது, குடும்பம் எண்ணிலடங்கா துயரங்களை அடைகிறது. மேலும், குடும்ப கௌரவம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க காரணம் நமது வீடுதானா?

🏠அனைவருக்கும் பிறப்பும், இறப்பும் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. விதியின் அமைப்பை யாராலும் மாற்ற முடியாது. ஆனால், நமது வீடு எனும் கட்டிட அமைப்பை நிச்சயமாக மாற்ற முடியும். காதலுக்கும், வீட்டிற்கும் சம்பந்தம் இருக்குமா? என பலர் ஏளனமாக கேட்பர். நிச்சயமாக உண்டு. ஒவ்வொரு வீட்டின் அமைப்பிற்கும், ஒரு வகையான தொடர்பு இருக்கிறது. வடக்கும், மேற்கும் சந்திக்கும் வடமேற்கு மூலை ஒரு வீட்டில் காதலை நிர்ணயிக்கும் அமைப்பாகும்.

🏠கற்றறிந்த வாஸ்து நிபுணர் மட்டுமே உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றவும், அதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சிறந்தாக மாற்ற முடியும் என்பது உண்மை. இதனை பலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

🏠உங்கள் இல்லறம் நல்லறமாக, உங்கள் வீட்டுப்பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க பரிகாரம் இல்லாத வாஸ்து ஒன்றே வழி. உங்கள் லட்சியங்கள் நிறைவேற தேர்ந்த வாஸ்து நிபுணர் தங்களுக்கான தீர்வுகளுடன் வருவார்...



Share this valuable content with your friends