No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மார்கழி மாதத்தில் கட்டிடம் கான்கிரீட் போடலாமா?

Dec 23, 2019   Ananthi   779    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போகலாமா?

🌟 மார்கழி மாதத்தில் வாடகை வீட்டிற்கு குடிப்போவதை தவிர்த்து தை மாதத்தில் குடிப்போகவும்.

2. மார்கழி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 மார்கழி மாதத்தில் சாஸ்திர ரீதியாக திருமணம் செய்யலாம்.

🌟 ஆனால், நாளடைவில் மக்கள் தவிர்த்து வந்த காரணத்தினால் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யப்படுவதில்லை.

3. மார்கழி மாதத்தில் புதிய கடையை திறக்கலாமா?

🌟 மார்கழி மாதத்தில் புதிய கடையை திறக்கலாம்.

4. மார்கழி மாதத்தில் கட்டிடம் கான்கிரீட் போடலாமா?

🌟 மார்கழி மாதத்தில் கட்டிடம் கான்கிரீட் போடுவதை காட்டிலும் தை மாதத்தில் போடலாம்.

5. மார்கழி மாதத்தில் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 மார்கழி மாதம் பத்திரப்பதிவு செய்வதை காட்டிலும் தை மாதத்தில் மேற்கொள்ளவும்.

6. அறுபதாம் கல்யாணத்தை வீட்டில் செய்யலாமா?

🌟 அறுபதாம் கல்யாணத்தை வீட்டில் செய்வதை காட்டிலும் கோவில்களில் செய்வது சிறப்பு.

7. கருவுற்றிருக்கும்போது தாலிக்கயிற்றை மாற்றலாமா?

🌟 கருவுற்றிருக்கும்போது தாலிக்கயிற்றை மாற்றுவதை தவிர்க்கவும்.



Share this valuable content with your friends