No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜன்னல்களின் பங்கு இவ்வளவு உண்டா?

Dec 19, 2019   Malini   384    வாஸ்து 

🏠நிச்சயம் எப்படி மனிதனின் உடலில் கண், காது, மூக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப்போல் வாஸ்துவில் ஜன்னலும் முக்கியமான ஒன்று. சில சமயங்களில் வீட்டில் உள்ளவர்களின் பணம், திருமணம், உடல் உபாதைகள் போன்றவற்றை தீர்மானிப்பதில் ஜன்னல்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

🏠உதாரணமாக, வடக்கு பகுதியில் ஜன்னல் என்பது வருமானத்தை குறிப்பது. வருமானம் என்றாலே முதலில் அது ஆண்கள் சம்பந்தப்பட்டது.

🏠கிழக்கு பகுதி என்பது பணம், குணம் சம்பந்தப்பட்டது. இவை வீட்டு பெண்களுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. ஆகையால் வடக்கிலும், கிழக்கிலும் அதிக அளவில் ஜன்னலின் பங்கு உண்டு.

🏠அதேபோல் வடகிழக்கில் ஜன்னல் அமையப் பெற்றால் அந்த வீட்டில் நிச்சயம் எந்தவொரு தீய சக்தியும் உள்ளே வர வாய்ப்புகள் இல்லை. மேலும், அந்த வீட்டில் உள்ள ஆண் மற்றும் பெண்ணுக்கு எப்போதும் எந்தவொரு தடையும் நிச்சயம் ஏற்படாது. திருமணம், வேலை, பணம், குழந்தை பாக்கியம் போன்றவை மிக விரைவாகவும், விமர்சையாகவும் நடைபெறும்.

🏠அதேபோல் வடக்கில் ஜன்னல்கள் அமைக்கும்போது அது வடமேற்கு பகுதியில் சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெற்கிலும், மேற்கிலும் ஜன்னல்கள் அமைக்க வேண்டும். ஆனால், அது தவறான அமைப்பில் அமைத்துவிட்டால் அது மிகப்பெரிய தீங்கை விளைவித்துவிடும். நல்ல வாஸ்து நிபுணர் உங்கள் வீட்டின் ஜன்னல்களை சரியான அமைப்பில் ஏற்படுத்தி தங்களின் நல்வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தி தருவார்.




Share this valuable content with your friends