1. தை மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?
🌟 தை மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாம்.
2. 11ல் செவ்வாய், புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.
🌟 வியாபாரம் செய்வதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 நல்ல அறிவாற்றல் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. 12ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 கண்களில் கோளாறுகள் உண்டாகலாம்.
🌟 எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.
🌟 உடல் பலம் இல்லாதவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 7ல் இருந்து குரு, சனி, சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.
🌟 கற்பனை செய்வதில் வல்லவர்கள்.
🌟 பெருந்தன்மையான குணநலன்களை உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. ரஜ்ஜூப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
🌟 ரஜ்ஜூப்பொருத்தம் என்பது மாங்கல்ய பொருத்தம் ஆகும்.
🌟 மாங்கல்ய பொருத்தம் இல்லையெனில் திருமணம் செய்யக்கூடாது.
🌟 ஆயுள் பொருத்தம் இருவருக்கும் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.
6. 8ல் புதன், சூரியன், சுக்கிரன், கேது இருந்தால் என்ன பலன்?
🌟 நீண்ட ஆயுளை கொண்டவர்கள்.
🌟 அற்ப சிந்தனைகளை உடையவர்கள்.
🌟 சந்தேக எண்ணங்களை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. 6ம் வீட்டில் சூரியன் இருந்தால் என்ன பலன்?
🌟 உயர் பதவிகள் வகிக்கக்கூடியவர்கள்.
🌟 சுகபோகங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.
🌟 நல்ல ஜீரணசக்தி உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.