1. புதனும், சனியும் சேர்ந்திருந்தால் என்ன பலன்?
🌟 பெரிய நட்பு வட்டத்தை கொண்டவர்கள்.
🌟 பொருள் சேர்ப்பதிலும், காப்பதிலும் வல்லவர்கள்.
🌟 எதிலும் கணக்குடன் இருக்கக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. நான் மிதுன லக்னம். மகரத்தில் சந்திரன் மற்றும் ராகு இணைந்திருந்தால் என்ன பலன்?
🌟 செயல்பாடுகளை அறிந்து கொள்வது என்பது சற்று சிரமமாகும்.
🌟 அதிக நினைவுத்திறன் கொண்டவர்கள்.
🌟 தன்னுடைய விருப்பம்போல் வாழக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. 8ல் குரு, சுக்கிரன், சனி, கேது, சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?
🌟 மனைவியின் மூலம் மாற்றம் உண்டாகும்.
🌟 சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. 8ல் சனி இருந்தால் என்ன பலன்?
🌟 சகோதர வகையில் சாதகமற்ற சூழல் உண்டாகும்.
🌟 உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. 9ல் குரு மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 பூர்வீகத்தால் அனுகூலம் உண்டாகும்.
🌟 தந்தை உறவுகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 5ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?
🌟 குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் இல்லாதவர்கள்.
🌟 பிறருக்கு உதவும் குணம் உடையவர்கள்.
🌟 வசதி வாய்ப்புகள் குறையும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. 3ல் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 சுகபோகங்களுடன் வாழக்கூடியவர்கள்.
🌟 அறுசுவை உணவு உண்ணக்கூடியவர்கள்.
🌟 சகோதரிகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.