No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூஜையறையை தென்கிழக்கில் மட்டும்தான் அமைக்க வேண்டுமா?

Dec 10, 2019   Malini   385    வாஸ்து 

🏠 கடவுளை அனைத்து இடங்களிலும் வழிபடலாம் என்றாலும் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜையறையை வாஸ்துபடி அமைத்தால்தான் ஒரு குடும்பம் மிக செழிப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

🏠 வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். அப்படி வாசம் செய்தாலும் அவள் அந்த வீட்டில் குடியிருக்க சரியான இடம் வேண்டும்.

🏠 தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி, வீட்டில் பூஜையறையை தென்கிழக்கிலும், சுவாமி படங்களை கிழக்கு நோக்கி இருக்கும்படியும் அமைக்க வேண்டும்.

🏠 தென்கிழக்கு என்பது பொதுவாக பெண்களின் மனம் மற்றும் தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட இடமாகும். ஆகையால்தான் தென்கிழக்கில் சமையலறை அமைக்க அறிவுறுத்தப்படுகிறது.

🏠 அப்படி அமைக்கும்போது பெண்கள் மிக மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பார்கள். அத்துடன் அங்கு பூஜையறை சேர்த்து அமைக்கப்படும்போது இவை அனைத்துடன் மகாலட்சுமியின் அருளும் கிடைக்கப்பெறும்.

🏠 அதனால் அந்த குடும்பம் மிக சந்தோஷத்துடன் மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெற்று வாழ்வார்கள். பொதுவாக சிலர் வாஸ்துபடி பூஜையறை வடகிழக்கில் அமைப்பதுதான் நல்லது எனவும், அதுவே ஈசானிய மூலை, ஈசனுக்கு உரியது. அதனால் அங்கு வருவதே சிறப்பு என கூறுவர்.

🏠 ஆனால் பூஜையறையில் விளக்கு ஏற்றும்போது வடகிழக்கில் நீர் சார்ந்த அமைப்பு மட்டுமே வர வேண்டிய இடத்தில் நெருப்பு இருக்கும்போது அந்த வீட்டில் உள்ள ஆண்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

🏠 அதனால்தான் தென்கிழக்கில் சமையலறை மற்றும் பூஜையறை வருவது மேன்மை தரும் என கூறுவர். தென்கிழக்கில் சமையலறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கில் அமைத்துக்கொள்ளலாம்.

🏠 நிச்சயம் பூஜையறையை வடகிழக்கு மற்றும் தென்மேற்கில் அமைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த வீட்டின் ஆண், பெண் இருவரையும் அது போன்ற அமைப்புகள் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கலாம்.




Share this valuable content with your friends