No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் கண்டிப்பாக பார்க்க வேண்டுமா? இல்லையா?

Nov 26, 2019   Ananthi   333    ஜோதிடர் பதில்கள் 

1. காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் கண்டிப்பாக பார்க்க வேண்டுமா? இல்லையா?

🌟 காதல் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்ப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.

2. 9ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

🌟 பொதுப்பணியில் ஈடுபாடு உண்டாகும்.

🌟 தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்தில் சனி வக்கிரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 ரகசியத்தை காப்பாற்றக்கூடியவர்கள்.

🌟 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.

🌟 நிதானமான நடவடிக்கையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ரஜ்ஜூப்பொருத்தம் இல்லை என்றாலும் ஆரோகணம், அவரோகணம் சரியாக இருந்தால் திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து வைக்கலாம்.

5. கரிநாள் அன்று புதிய பொருட்கள் வாங்கலாமா?

🌟 கரிநாள் அன்று புதிய பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.

6. இறந்தவர்களின் புகைப்படங்கள் எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 இறந்தவர்களின் புகைப்படங்கள் தெற்கு திசையை நோக்கிய வண்ணம் வைக்க வேண்டும்.

7. ராசிக்கல் மோதிரம் அணிவதால் உண்மையில் நற்பலன் கிடைக்குமா?

🌟 ராசிக்கல் மோதிரம் அணிவதால் உண்மையில் நற்பலன் கிடைக்கும்.



Tagged  MARRIAGE

Share this valuable content with your friends