No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண்-அப்போ முன்னால் இருப்பது வாஸ்துவா?

Nov 21, 2019   Malini   446    வாஸ்து 

🏠 இந்த உலகில் வெற்றி என்பது ஆண்களுக்கு மட்டும் சொந்தமா? என்றால் கேள்விக்குறிதான். ஏனென்றால் வெற்றி என்பது ஆண்களுக்கு ஒவ்வொரு கட்டங்களிலும் அவர்களது வாழ்க்கையில் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

🏠 அதனால்தான் ஆண்கள் வெற்றிக்காக மிகப்பெரிய சவால்களையும், சந்தர்ப்பங்களையும், சூழ்ச்சிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

🏠 முதற்கட்டமாக கல்வி பயிலும் சமயத்தில் வெற்றி கட்டாயம் கிடைக்க ஒருவரது வீட்டில் வடகிழக்கு மூலை சரியானதாக இருத்தல் வேண்டும். அடுத்தக்கட்டமாக வேலை கிடைத்து பணம் ஈட்ட ஒருவரது வீட்டில் வடக்கு, கிழக்கு, வடமேற்கு பகுதிகள் சரியாக இருத்தல் வேண்டும்.

🏠 அடுத்ததாக மிக முக்கியமான புதிய வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லக்கூடிய திருமண வாழ்க்கை. எந்தவொரு இன்னல்களும் இல்லாமல் சந்ததிகள் மிகப்பெரிய வெற்றியை பெற ஒருவரது வீட்டில் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு சரியாக இருத்தல் வேண்டும்.

🏠 மேலும் ஒருவரது இருப்பிடத்தில் உள்ள ஒவ்வொரு திசையும், அதன் அமைப்பும் பல்வேறு காலக்கட்டத்தில் அவருக்கு வெற்றியை மிகப்பெரிய அளவில் பெற்றுக் கொடுக்கும்.

🏠 எப்படி ஒரு நாடு மிகப்பெரிய வளர்ச்சி பெற்றால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதோ, அது போல் ஒரு குடும்பத்தில் ஆண் வெற்றி பெற வாஸ்து முறைப்படி அமைந்த இருப்பிடமும், அதன் மூலம் அவரின் பின்னால் ஒரு பெண்ணும் இருப்பாள்.

🏠 அவ்வாறாக வெற்றி பெற்றால் அவரை சுற்றி இருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மிக சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாஸ்து வழி வகுக்கும்.

🏠 ஆகையால் தங்களது வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் பெற உங்களது வீட்டை நல்ல வாஸ்து அமைப்பில் வருமாறு சரிசெய்து கொள்ளுங்கள்.




Share this valuable content with your friends